ரஜினி வேணும்னா அதிர்ஷ்டத்தை நம்பலாம் !! ஆனா நாங்க யாரை நம்புவோம் தெரியுமா ? தெறிக்கவிட்ட ஜெயகுமார் !!

Published : Nov 18, 2019, 07:31 PM IST
ரஜினி வேணும்னா அதிர்ஷ்டத்தை நம்பலாம் !! ஆனா நாங்க யாரை நம்புவோம் தெரியுமா ? தெறிக்கவிட்ட ஜெயகுமார் !!

சுருக்கம்

நடிகர் ரஜினகாந்த் அதிசயம், அதிர்ஷ்டத்தை நம்பலாம். ஆனால் நாங்கள் மக்களை, வாக்காளர்களை மட்டுமே நம்புகிறோம் என அமைச்சர் ஜெயக்குமார்  அதிரடியாக தெரிவித்தார்.  

தமிழகத்தில் புதிய தலைமை தகவல் ஆணையரை நியமிப்பது தொடர்பாக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை, அமைச்சர் ஜெயக்குமார் இன்று சந்தித்து ஆலோசனை செய்தார். இதைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் பேசினார்.. 

அப்போது முதலமைச்சர் எடப்பாடி  பழனிசாமி தலைமையில், தலைமை தகவல் ஆணையரை நியமிப்பது குறித்து ஆலோசனை நடந்தது. இது தொடர்பான பரிந்துரை கடிதத்தை கவர்னரிடம் கொடுத்துள்ளதாக தெரிவித்தார். 

அதிசயம், அற்புதம், அதிர்ஷ்டம் நிகழும் என ரஜினி சொன்னது, அதிமுகவுக்கு தான். மீண்டும் நாங்கள் தான் ஆட்சி அமைப்போம். 2021ல் அதிமுக ஆட்சி அமைப்பதையே அதிசயம் என்று ரஜினி கூறி இருக்கலாம். 

அதிசயம், அதிர்ஷ்டத்தை ரஜினி நம்பலாம், ஆனால் நாங்கள் மக்களை, வாக்காளர்களை  மட்டுமே நம்புகிறோம். அதிமுகவை விமர்சித்து பெரிய ஆள் ஆகிவிடலாம் என நினைக்கிறார்கள். ஜெயலலிதா மறைவுக்கு பின் அதிமுக மறைந்து விடும் என்றார்கள். ஆனால் ஆட்சி தொடர்ந்து நடைபெறுகிறது என அதிரடியாக கூறினார்.

PREV
click me!

Recommended Stories

Magalir Urimai Thogai: அக்டோபரில் ரூ.2,500 வரப்போகுதா? முதல்வர் விஜய் கொடுக்கப்போகும் அடுத்த ஜாக்பாட்!
Thaimaman Thanga Modhiram Scheme: தாய்மாமன் தங்க மோதிரம் - யார் தகுதி? என்னென்ன ஆவணங்கள் தேவை?