புதிய கல்விக் கொள்கை கூட்டம் புறக்கணிப்பு... தமிழக அரசின் ஆதங்கம் சரியானதுதான்.. கிருஷ்ணசாமியின் ட்வி(ஸ்)ட்.!

By Asianet TamilFirst Published May 17, 2021, 8:46 PM IST
Highlights

புதிய கல்விக் கொள்கை தொடர்பாக புதிதாக பொறுப்பேற்றுள்ள தமிழக அரசிடமும் கருத்தை கேட்க வேண்டும் என்ற பள்ளிக்கல்வி அமைச்சர் அன்பில் பொய்யாமொழி மகேஷின் ஆதங்கம் சரியானதே என்று புதிய தமிழகம் கட்சியின் நிறுவனர் தலைவர் கே.கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.
 

புதிய கல்விக்கொள்கையை அமல்படுத்துவது தொடர்பாக மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தலைமையில் அனைத்து மாநில கல்வித்துறை செயலாளர்களுடன் இன்று காணொலி மூலம் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் மாநில கல்வி அமைச்சர்களுடனும் மத்திய அரசு கலந்து ஆலோசனை நடத்த வேண்டும் என தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மத்திய அரசுக்கு கடிதம் எழுதியிருந்தார். இந்தக் கடிதத்துக்கு மத்திய அரசிடம் இருந்து எந்தப் பதிலும் வரவில்லை.
இதையடுத்து புதிய கல்வி கொள்கை குறித்த மத்திய அரசின் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்காமல் தமிழக அரசு புறக்கணித்தது.  “மத்திய அரசு கல்வி அமைச்சரை ஆலோசனைக்கு அழைக்காமல் துறை அதிகாரியை அழைத்துள்ளது கண்டிக்கத்தக்கது. இட ஒதுக்கீடு தொடர்பாக புதிய கல்வி கொள்கையில் குறிப்பிடப்படவில்லை. மும்மொழி கல்வி கொள்கை திணிக்கும் வகையில் உள்ளது” என தன்னுடைய ஆதங்கமான விளக்கத்தை அளித்திருந்தார். கல்வி அமைச்சர் மற்றும் தமிழக அரசின் இந்த முடிவுக்கு திமுக கூட்டணி கட்சிகள் ஆதரவு தெரிவித்தன.

மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கை பற்றி அரசு அதிகாரிகளிடம் மட்டும் பேசினால் போதாது,
புதிதாக பொறுப்பேற்றுள்ள தமிழக அரசிடமும் அதன் கருத்தை கேட்க வேண்டுமென்ற கல்வி அமைச்சர் அன்பில் பொய்யாமொழி மகேஷ் அவர்களின் ஆதங்கம் சரியானதே.

— Dr K Krishnasamy (@DrKrishnasamy)

இந்நிலையில் புதிய தமிழகம் கட்சியும் கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியின் நிலைப்பாட்டுக்கு ஆதரவு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக அக்கட்சியின் நிறுவனர் தலைவர் டாக்டர் கே.கிருஷ்ணசாமி ட்விட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், “மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கை பற்றி அரசு அதிகாரிகளிடம் மட்டும் பேசினால் போதாது. புதிதாக பொறுப்பேற்றுள்ள தமிழக அரசிடமும் அதன் கருத்தை கேட்க வேண்டுமென்ற கல்வி அமைச்சர் அன்பில் பொய்யாமொழி மகேஷின் ஆதங்கம் சரியானதே.” என்று தெரிவித்துள்ளார்.

 

click me!