டி.வி.யை ஆன் செய்தால் ஆணழகன் ஸ்டாலின்.. வந்தாரு, போனாரு, ரிப்பீட்டு.. ஜெயக்குமார் ரகிட ரகிட.!

By Asianet Tamil  |  First Published Feb 5, 2022, 8:30 PM IST

"கொள்ளையடித்த பணத்தை வைத்து திமுகவினர் கவுன்சிலர்களை விலைக்கு வாங்க முயற்சிப்பார்கள். கட்சியினர் விலை போனால் அது மன்னிக்க முடியாத குற்றம் ஆகும். அப்படியெல்லாம் செய்து மக்கள் காறித் துப்பும் நிலையை கட்சிக்கு ஏற்படுத்தி விடாதீர்கள்”


தொலைக்காட்சியை ஆன் செய்தால் மு.க.ஸ்டாலின்தான் வருகிறார் என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார். 

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் முடிந்துவிட்ட நிலையில், வேட்பாளர்கள் பிரசாரத்தில் கவனம் செலுத்தத் தொடங்கிவிட்டனர். தலைநகர் சென்னையில் திமுக வேட்பாளர்களை முந்திக்கொண்டு அதிமுக வேட்பாளர்கள் உடனே பிரசாரத்தைத் தொடங்கிவிட்டனர். முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து சென்னையின் பல பகுதிகளில் பிரசாரத்தில் ஈடுபட்டார்.  வண்ணாரப்பேட்டையில் நடந்த வேட்பாளர்கள் அறிமுகக் கூட்டத்தில் ஜெயக்குமார் பேசுகையில், “அதிமுக ஆட்சியில் தாலிக்கு தங்கம் , பள்ளி குழுந்தைகளுக்கான விலையில்லா பொருட்கள், மகளிருக்கான மானிய விலை ஸ்கூட்டர், இயற்கைப் பேரிடரின்போது நடந்த நிவாரணப் பணிகள், மகளிர் நீதிமன்றம் என நிறைய திட்டங்களை நிறைவேற்றினோம்.

Latest Videos

undefined

அதையெல்லாம் எடுத்துக்கூறி அதிமுக வேட்பாளர்கள் வாக்கு சேகரிக்க வேண்டும். திமுக ஆட்சியின் அவலநிலையையும் எடுத்து கூறுங்கள். பொங்கல் தொகுப்பு என்ற பெயரில் குப்பையைத்தான் கொடுத்தனர். உள்ளாட்சியில் மகளிருக்கான 50 சதவீத இட ஒதுக்கீடு போன்ற அதிமுக திட்டங்களை மோசடி செய்து திமுக தனது திட்டமாக பேசி வருகிறது. தொலைக்காட்சியை ஆன் செய்தாலே ஆணழகன் ஸ்டாலின்தான் வருகிறார். வந்தாரு... போனாரு.. ரிப்பீட்டு என்பது போல ஸ்டாலின் படம்தான் திரும்பத் திரும்ப வருகிறது. 2006ஆம் ஆண்டில் திமுக ஆட்சிக் காலத்தில் உள்ளாட்சி தேர்தலில் 87 வார்டுகளில் கலவரம் நடந்தது. நீதிபதி ஓட்டையே யாரோ செலுத்தி விட்டனர். எனவே அங்கெல்லாம் மறு தேர்தல் நடந்தது.

பூத் ஏஜெண்டுகள் நம்பிக்கையானவர்களாக இருக்க வேண்டும். குறிப்பாக மாலை 5 முதல் 6 மணிக்கு மிகக் கவனதாக இருக்க வேண்டும். எதிர்கட்சியினர் 1 லட்சம் கொடுத்தாலும் மூஞ்சியில் தூக்கி வீசுபவர்களாக ஏஜெண்ட்டுகள் இருக்க வேண்டும். தேர்தல் முடிவு வெளியான பிறகு, மறைமுகத் தேர்தலுக்கு 10 நாட்கள் இடைவெளி உள்ளது. எனவே, கொள்ளையடித்த பணத்தை வைத்து திமுகவினர் கவுன்சிலர்களை விலைக்கு வாங்க முயற்சிப்பார்கள். கட்சியினர் விலை போனால் அது மன்னிக்க முடியாத குற்றம் ஆகும். அப்படியெல்லாம் செய்து மக்கள் காறித் துப்பும் நிலையை கட்சிக்கு ஏற்படுத்தி விடாதீர்கள்” என்று ஜெயக்குமார் பேசினார். 
 

click me!