
தைரியம் இருந்தால் அதிமுக பொதுச்செயலாளர் சசிகலாவை இன்றே நீக்குங்கள் எனவும், பொதுச்செயலாளரை எப்படி நீக்கமுடியும் எனறும் கர்நாடக அதிமுக செயலாளர் புகழேந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.
அதிமுகவின் எடப்பாடியும் அணியும் பன்னீர் அணியும் இன்று தலைமை கழகத்தில் இணைந்தன. மேலும் சசிகலாவை நீக்க பொதுக்குழு கூட்டப்படும் என வைத்தியலிங்கம் அறிவிப்பு வெளியிட்டார்.
இதைதொடர்ந்து துணை பொதுச்செயலாளராக பன்னீர்செல்வம் பொறுப்பெற்று கொண்டார். அவருக்கு ஆளுநர் வித்யாசாகர் ராவ் பதவி பிரமானம் செய்து வைத்தார்.
இந்நிலையில், செய்தியாளர்களை சந்தித்த கர்நாடக அதிமுக செயலாளர் புகழேந்தி, தைரியம் இருந்தால் அதிமுக பொதுச்செயலாளர் சசிகலாவை இன்றே நீக்குங்கள் எனவும், பொதுச்செயலாளரை எப்படி நீக்கமுடியும் எனறும் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுவரை எடப்பாடி தலைமையிலான ஆட்சி சரியில்லை என கூறிவந்த பன்னீர் தற்போது எப்படி இணைப்பை மேற்கொண்டார் எனவும், இமெயில் ஐடியை முடக்கிய ஆட்சி இது எனவும் தெரிவித்தார்.
நாட்டு மக்களை முழுவதுமாக ஏமாற்றியிருக்கிறார்கள் எனவும், என்ன நடக்கிறது என்பதை பொறுத்திருந்து பாருங்கள் எனவும் தெரிவித்தார்.
சந்தர்ப்பவாத ஆட்சியை மக்கள் ஏற்கமாட்டார்கள் எனவும் எடப்பாடி தலைமையிலான ஆட்சி இனிமேல் நீட்டிக்க முடியாது எனவும் குறிப்பிட்டார்.