நீங்க தடுப்பூசி போடலைனா நாங்க சம்பளம் போடமாட்டோம்... அரசு ஊழியர்களுக்கு ஆப்பு..!

By Thiraviaraj RMFirst Published Dec 23, 2021, 8:20 AM IST
Highlights

கோவிட் தடுப்பூசி சான்றிதழின் எண்ணை சம்பளத் தொகுதியுடன் இணைக்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

அரசு ஊழியர்கள் தங்கள் மாத சம்பளத்தைப் பெறுவதற்கு தடுப்பூசி சான்றிதழ்களை சமர்ப்பிக்க வேண்டும் என்று இன்று முதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

ஒரு நபர் தனது சம்பளத்தைப் பெறுவதற்கு முழுமையாக தடுப்பூசி போடலாம் அல்லது குறைந்தபட்சம் ஒரு டோஸ் எடுத்திருக்கலாம். அவர்கள் கட்டாயமாக பஞ்சாப் அரசின் ஜாப் போர்டலில் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய வேண்டும். சான்றிதழ்கள் மாநிலத்தின் iHRMS அல்லது ஒருங்கிணைந்த மனித வள மேலாண்மை அமைப்பு இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட வேண்டும்.

கொரோனா வைரஸின் புதிய மாறுபட்ட ஓமிக்ரான் குறித்த கவலைகள் அதிகரித்து வருவதால், மேலும் மேலும் பணியாளர்கள் கோவிட் தடுப்பூசி போடுவதை ஊக்குவிக்க மாநில அரசின் முயற்சியாக இந்த நடவடிக்கை பார்க்கப்படுகிறது.

இதுகுறித்த உத்தரவில், மாநில நிதித் துறை அனைத்து மூத்த அதிகாரிகள், துறைகளின் தலைவர்கள், கோட்ட ஆணையர்கள், துணை ஆணையர்கள் மற்றும் பிறருக்கு இதனை உறுதிப்படுத்துமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. இரண்டு டோஸ்களின் கோவிட் தடுப்பூசி சான்றிதழின் எண்ணை iHRMS உடன் பதிவு செய்ய வேண்டும் என்று அரசு ஊழியர்களுக்குத் தெரிவிக்க வேண்டும், எந்தவொரு ஊழியருக்கும் ஒரு டோஸ் வழங்கப்பட்டிருந்தால், அவர்களது தற்காலிகச் சான்றிதழின் எண்ணைப் பதிவு செய்ய வேண்டும் என்று உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

கோவிட் தடுப்பூசி சான்றிதழின் எண்ணை சம்பளத் தொகுதியுடன் இணைக்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. ஒரு ஊழியர் தடுப்பூசி தொடர்பான தகவல்களை வழங்கவில்லை என்றால், அவர்களது சம்பளம் வழங்கப்பட மாட்டாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்தியாவின் கடந்த ஜனவரி மாதம் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கியது. தற்போது வரை 130 கோடிக்கும் அதிகமான தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. கோவின் தளத்தில் தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றிதழ்களை தரவிறக்கம் செய்துகொள்ளலாம். தற்போது ஒமைக்ரான் வகை கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. இதுவரை நாட்டில் 210க்கும் மேற்பட்டோருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒமைக்ரான் பரவலையடுத்து, தடுப்பூசி செலுத்தும் பணிகளை மத்திய, மாநில அரசுகள் துரிதப்படுத்தி வருகின்றன. 

 

click me!