செத்தா அக்காகிட்ட... பிழைச்சா மக்கள்கிட்ட... கண்கலங்க வைத்த சசிகலா..!

Published : Feb 05, 2021, 09:52 AM IST
செத்தா அக்காகிட்ட... பிழைச்சா மக்கள்கிட்ட... கண்கலங்க வைத்த சசிகலா..!

சுருக்கம்

 மனநிலையை மாற்றிக் கொள்வது தானே எல்லா காயங்களுக்குமான மருந்து என மருத்துவர்களிடம் சசிகலா கூறியிருக்கிறார்.

சிறைவாசத்தை முடித்து பெங்களூருவில் தங்கி இருக்கும் சசிகலா வரும் 8ம் தேதி தமிழகம் வர இருக்கிறார். அவர் ஜெயலலிதா காரை பயன்படுத்தி, அதிமுக கொடியை காரில் கட்டி சென்றது தமிழக அரசியலில் விவாதத்தைக் கிளப்பி இருக்கிறது. 

முன்னதாக, கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு பெங்களூரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது சசிகலா அந்த மருத்துவமனையின் மருத்துவர்களிடம் பேசியது குறித்த தகவல் தற்போது ஊடகங்களில் வெளியாகி உள்ளது. 

பெங்களூரு விக்டோரியா மருத்துவமனை மருத்துவர்களிடம் ’தண்டனை முடியும் நேரத்தில் திடீரென மருத்துவமனையில் சேர்ந்த நிலையில் கொரோனா என கூறியபோது நம்மைச்சுற்றி என்ன நடக்கின்றது என்று தெரியாமல் குழப்பம் ஆகி விட்டேன். அடுத்த நிமிஷமே ’செத்தா அம்மா கிட்ட போவோம், பிழைத்தால் மக்கள்கிட்ட போவோம்’’என்று நினைத்து என்னை நானே தைரியமாக கொண்டேன். மனநிலையை மாற்றிக் கொள்வது தானே எல்லா காயங்களுக்குமான மருந்து என மருத்துவர்களிடம் சசிகலா கூறியதாக’’ ஊடகம் ஒன்றில் செய்தி வெளியாகி இருக்கிறது. இந்த செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

PREV
click me!

Recommended Stories

விருகம்பாக்கம் தொகுதி யாருக்கு..? பிரபாகர் ராஜாவா..? தனசேகரனா..? ட்விஸ்ட் வைக்கும் திமுக தலைமை..!
பாரதியாரே நமக்கு சல்லி... சப்ப பீஸு..! மகாகவியை ரொம்ப கேவலமாக பேசும் திமுக கூட்டம்..!