எவ்வளவு சொன்னாலும் புரியல.. தயவு செய்து கேளுங்க.. வேதனையில் முதல்வர் ஸ்டாலின்.

Published : Jul 30, 2021, 09:40 AM ISTUpdated : Jul 30, 2021, 09:43 AM IST
எவ்வளவு சொன்னாலும் புரியல.. தயவு செய்து கேளுங்க.. வேதனையில் முதல்வர் ஸ்டாலின்.

சுருக்கம்

கொரோனா என்ற கொடிய வைரஸ் நோய் நாட்டிற்கும், நாட்டு மக்களுக்கும் உயிர் பய்த்தை உணர்த்தி விட்டது. ஒருவிதமான பயத்தை ஏற்படுத்தி இருக்கிறதே தவிர அதனுடைய நடைமுறையை மாற்றி இருக்கிறதா என்றால் இல்லை. ஊரடங்கு ஓரளவு தளர்த்தினால் அனைவரும் கூட்டமாக சேர்ந்து விடுகிறோம், 

சென்னை தனியார் மருத்துவமனையில் தழும்பில்லா ரோபோடிக் கல்லீரல் தான அறுவை சிகிச்சை மையத்தை தமிழக  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். அப்போது அவர் பேசியதாவது, இந்தியாவிலேயே தமிழ்நாட்டிலேயே தலைசிறந்த மருத்துவமனையாக இது இருக்க வேண்டும், வேற எந்த எதிர்பார்ப்பும் எனக்கு இல்லை என்று ஜெகத்ரட்சகன் கூறியதாக டாக்டர் அவர்கள் கூறியுள்ளார், பொதுவாக எதிர்பார்ப்பு இல்லாத மனிதராக வளரக்கூடிய ஜெகத்ரட்சகன் அரசியல் பணி, கல்விப்பணி, ஆன்மீகப் பணி போல மருத்துவ பணியையும் திறம்பட செய்து கொண்டிருக்கிறார். 

 

கொரோனா என்ற கொடிய வைரஸ் நோய் நாட்டிற்கும், நாட்டு மக்களுக்கும் உயிர் பய்த்தை உணர்த்தி விட்டது. ஒருவிதமான பயத்தை ஏற்படுத்தி இருக்கிறதே தவிர அதனுடைய நடைமுறையை மாற்றி இருக்கிறதா என்றால் இல்லை. ஊரடங்கு ஓரளவு தளர்த்தினால் அனைவரும் கூட்டமாக சேர்ந்து விடுகிறோம், அது தான் இங்கேயும் தற்போது ஏற்பட்டுள்ளது. 

அரசாங்கம் எவ்வளவு தான் விழிப்புணர்வை ஏற்படுத்தினாலும் அதை உணராத சிலர் இருக்கின்ற காரணத்தினால்தான் வைரஸ் பரவுவதில் முற்றுப்புள்ளி வைப்பதில் தாமதம் ஏற்படுகிறது. இந்த சூழலில் அரசாங்கம் மட்டுமல்ல இது போன்ற மருத்துவமனைகள் தன்னார்வ அமைப்புகள் சேவை செய்து மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். இந்தக் கொரோனா காலகட்டத்தில் மருத்துவத் துறையினர் செய்த சேவைகள் நிச்சயமாக யாராலும் மறக்க முடியாது. உயிரையே பணயம் வைத்து மருத்துவர்கள் செவிலியர்கள் தொண்டாற்றி உள்ளார்கள். அவர்களுக்கு எல்லாம் எனது இதயபூர்வமான நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். 

தமிழ்நாட்டில் தரமான மருத்துவமனைகள் திறமைமிக்க மருத்துவர்கள் செவிலியர்கள் மருத்துவம் சார்ந்த மாணவர்களை உருவாக்குவதில் சர்வதேச தரத்தை இலக்காகக் கொண்டு செயல்பட வேண்டும் என்று மருத்துவம் மக்கள் நல்வாழ்வுத்துறையை நான் அறிவுறுத்தி உள்ளேன். புதிது புதிதாக நோய்கள் வருகின்றன அவை பல நேரங்களில் மருத்துவர்களாலேயே கண்டுபிடிக்க முடியாத சூழல் ஏற்படுகின்றன, இத்தகைய சூழலில்தான் மருத்துவமனையில் உலகம் தரம் வாய்ந்த பல்வேறு மருத்துவமனைகள் தமிழ்நாட்டில் இது போன்று பல மருத்துவமனைகள் உருவாக்க வேண்டும் என கூறினார்.

 

PREV
click me!

Recommended Stories

திமுகவும், ஃபெவிக்கால் ஃபிரண்ட்ஷிபும்..! கவர்ண்மென்ட் நடத்துறீங்களா? கண்காட்சி நடத்துறீங்களா..? பங்கம் செய்த விஜய்..!
பெரியாரும், அண்ணாவும், எம்.ஜிஆரும் தமிழ்நாட்டின் சொத்து... நீங்க மட்டும்தான் சொந்தம் கொண்டாடணுமா..? ஆத்திரப்படும் விஜய்..!