எதற்கும் அஞ்சமாட்டோம்! அதிமுகவை அழிக்க நினைத்தால் அழிந்து போவார்கள்! போறபோக்கில் ஓபிஎஸ்-ஐ விளாசிய இபிஎஸ்!

By vinoth kumar  |  First Published Apr 3, 2023, 6:54 AM IST

திமுக ஒரு குடும்ப கட்சி. கார்ப்பரேட் கம்பெனி. அதிமுகவுக்கு அதன் தொண்டர்கள் தான் வாரிசு. குடும்பத்திற்காக பாடுபடும் கட்சி திமுக. மக்களுக்காக பாடுபடும் கட்சி அதிமுக. அதிமுகவில் தொண்டர் கூட முதல்வர், பொதுச்செயலாளர் பதவிக்கு வரமுடியும் அதற்கு நானே சாட்சியாக உள்ளேன். 


அதிமுகவில் தொண்டர் கூட முதல்வர், பொதுச்செயலாளர் பதவிக்கு வரமுடியும் அதற்கு நானே சாட்சியாக உள்ளேன் என சேலத்தில் எடப்பாடி பழனிசாமி பேசியுள்ளார். 

அதிமுக பொதுச்செயலாளராக பதவியேற்ற எடப்பாடி பழனிசாமி தனது சொந்த மாவட்டமான சேலத்திற்கு சாலை மார்கமாக புறப்பட்டு சென்றார். அப்போது, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சேலம் உள்ளிட்ட இடங்களில் வழி நெடுகிலும் அதிமுக தொண்டர்கள் இபிஎஸ்க்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். இதனையடுத்து சேலம் மாவட்டம் தலைவாசம் பேருந்து நிலையத்தில் பேசிய இபிஎஸ்;- எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோர் கட்சியை வழிநடத்தும்போது சந்தித்த சோதனைகளை நாமும் சந்தித்துக் கொண்டிருக்கிறோம். ஜெயலலிதா வகித்த பொதுச்செயலாளர் பதவியை தற்போது எனக்கு தொண்டர்கள் நீங்கள் வழங்கியுள்ளனர். 

Latest Videos

இதையும் படிங்க;- முதல் முறையாக டிவிட்டர் ஸ்பேஸில் பேசும் எடப்பாடி பழனிசாமி... உற்சாகத்தில் அதிமுக தொண்டர்கள்!!

திமுக ஒரு குடும்ப கட்சி. கார்ப்பரேட் கம்பெனி. அதிமுகவுக்கு அதன் தொண்டர்கள் தான் வாரிசு. குடும்பத்திற்காக பாடுபடும் கட்சி திமுக. மக்களுக்காக பாடுபடும் கட்சி அதிமுக. அதிமுகவில் தொண்டர் கூட முதல்வர், பொதுச்செயலாளர் பதவிக்கு வரமுடியும் அதற்கு நானே சாட்சியாக உள்ளேன்.  அதிமுகவில் நான் இன்றும் தொண்டனாக தான் உள்ளேன். என்னைப்போல் அதிமுகவில் உள்ள லட்சக்கணக்கான தொண்டர்கள் பொதுச்செயலாளர் ஆகலாம். அதிமுக தொண்டர்கள் அனைவருக்கும் அந்த தகுதி உள்ளது.

ஆனால், திமுகவில் முதல்வர் மற்றும் கட்சி தலைவராக ஒரு தொண்டன் கூட வரமுடியாது. அதிமுகவினர் மீது முதல்வர் ஸ்டாலின் பொய் வழக்குகளை பதிவு செய்து வருகிறார்கள். எத்தனை வழக்குகள் போட்டாலும் அவற்றை தவிடுபொடியாக்கி வெற்றி பெறுவோம். பொய் வழக்குகளுக்கு அதிமுக எப்போதும் அஞ்சியது கிடையாது. முதல்வர் ஸ்டாலின் எத்தனை அவராரம் எடுத்தாலும் அதிமுகவை அழிக்க முடியாது. அதேபோல், அதிமுகவை சிலர் முடக்க நினைக்கிறார்கள். இத்தனை ஆண்டுகள் அதிமுகவில் பதவி சுகத்தை அனுபவித்து விட்டு துரோகம் செய்கிறார்கள். திமுகவின் ’பி’ டீமாக இருந்து செயல்படுகிறார்கள் ஓபிஎஸ்-ஐ மறைமுகமாக தாக்கி பேசினார். 

இதையும் படிங்க;-  தமிழ்நாட்டில் 9 எம்.பி சீட்.. துணிவுடன் இறங்கிய பாஜக.. எல்.முருகன் சொன்ன புது கூட்டணி கணக்கு

திமுகவில் சீனியர் அமைச்சர்கள் கூட ஸ்டாலின் குடும்பத்திற்கு அடிமையாக உள்ளனர். சட்டப்பேரவையில் பேசிய அமைச்சர் துரைமுருகன், முன்னாள் முதல்வர் கருணாநிதி, தற்போது முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் உதயநிதியுடன் அரசியல் வாழ்க்கையில் உள்ளேன். வருங்காலத்தில் ஸ்டாலின் பேரன் இன்பநிதி கூடவும் இருப்பேன் என கூறுகிறார் என எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார். 

click me!