
திராவிட இயக்கம் இல்லையென்றால் ஆதினங்களே இருக்க முடியாது என்ற வரலாறு புதிதாக பொறுப்பேற்று வந்திருக்கும் மதுரை ஆதினத்திற்கு தெரியாது என்றும் மதுரை ஆதினத்தை திராவிட இயக்கம் தான் ஆதினத்தையே காப்பாற்றியது என்ற வரலாற்றை மதுரை ஆதினம் மறந்து கொண்டிருக்கிறார் என்று திராவிட கழக தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார். இதுக்குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், திராவிட இயக்கம் இல்லையென்றால் ஆதினங்களே இருக்க முடியாது என்ற வரலாறு புதிதாக பொறுப்பேற்று வந்திருக்கும் மதுரை ஆதினத்திற்கு தெரியாது. சூத்திரர்கள் சன்னியாசி ஆவதற்கு உரிமை இல்லை என்பது உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு, அதை எல்லாம் பற்றி கவலை படாமல் ஆதினங்களை அங்கிகரித்து இருப்பதே இந்த அரசு தான், கலைஞர் அரசு ஒடுக்கப்பட்ட மக்களுக்கான அரசு என சொன்னார்.
அதைப் பற்றி எல்லாம் புரிந்து கொள்ளாமல் யாருக்கோ யாரோ விடும் வில்லின் இவர்கள் அம்பாக மாற்றிக் கொண்டிருக்கிறார்கள். விரைவில் மதுரை ஆதினம் தன்னுடைய உணர்வுகளுக்கு திரும்ப வேண்டும், திரும்புவார். முன்னாள் இருந்த மதுரை ஆதினத்தை திராவிட இயக்கம் தான் ஆதினத்தையே காப்பாற்றியது என்ற வரலாற்றை மதுரை ஆதினம் மறந்து கொண்டிருக்கிறார்.
எனவே அவரது கடையாணியை அவரே களற்றிக் கொண்டிருக்கிறார் என்று தெரிவித்தார். முன்னதாக மதுரை மாவட்டம் உசிலம்பட்டி முருகன் கோவில் முன்பு திராவிட கழகம் சார்பில் மாநில உரிமை மீட்பு விளக்க பொதுக்கூட்டம் திராவிட கழக தலைவர் கி.வீரமணி தலைமையில் நடைபெற்றது. இந்த விழாவில் தா.பாண்டியன் மற்றும் திராவிட இயக்க நிர்வாகி பவுன்ராஜ் உள்ளிட்டோரின் திரு உருவபடங்கள் திறந்து வைக்கப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது.