ரோடு போட கொடுத்த 3 கோடி பணத்தை செந்தில் பாலாஜி எடுத்துகிட்டாரா? பிரேமலதா விஜயகாந்த் பரபரப்பு புகார்!!

Published : Jun 09, 2022, 07:40 PM IST
ரோடு போட கொடுத்த 3 கோடி பணத்தை செந்தில் பாலாஜி எடுத்துகிட்டாரா? பிரேமலதா விஜயகாந்த் பரபரப்பு புகார்!!

சுருக்கம்

கரூரில் போடாத சாலைக்கு ஒதுக்கப்பட்ட 3 கோடி ரூபாயை அமைச்சர் செந்தில் பாலாஜி எடுத்துக்கொண்டதாக தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். 

கரூரில் போடாத சாலைக்கு ஒதுக்கப்பட்ட 3 கோடி ரூபாயை அமைச்சர் செந்தில் பாலாஜி எடுத்துக்கொண்டதாக தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் அடுத்த கீழ் அருங்குணம் குச்சிப்பாளையம் கிராமத்தின் அருகே உள்ள கெடிலம் ஆற்றில் தடுப்பணை அருகே தேங்கிய நீரில் மூழ்கி சிறுமிகள் உட்பட 7 பெண்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த துயர சம்பவத்திற்கு நாடு முழுவதும் பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் இன்று உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.

மேலும் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 10 ஆயிரம் ரூபாய் நிதி உதவியையும் அவர் வழங்கினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், இனிமேல் இது போன்று சோக சம்பவம் எங்கும் நடைபெறக் கூடாது. தமிழக அரசு அதற்கான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். ஆற்றில் மணல் அள்ளப்பட்டதால் ஏற்பட்ட பள்ளத்தின் காரணமாகவே 7 பேர் உயிரிழந்துள்ளனர். அந்த பள்ளத்தை உடனடியாக மூட வேண்டும். அரசின் 5 லட்சம் உதவித் தொகையை 10 லட்சமாக உயர்த்தி வழங்க வேண்டும்.

உயரிழந்தவரின் குடும்பத்திற்கு அரசு வேலை வழங்க வேண்டும். உயிரிழந்த 7 பேரின் நினைவாக நினைவுத்தூண் இப்பகுதியில் அமைக்க வேண்டும். கரூரில் போடாத சாலைக்கு 3 கோடி ரூபாயை அமைச்சர் செந்தில் பாலாஜி எடுத்துள்ளதாக அப்பகுதி மக்கள் குற்றச்சாட்டுகின்றனர். ஆட்சி தான் மாறியுள்ளது. காட்சி மாறவில்லை. எந்த திட்டத்திற்கு பணம் ஒதுக்கப்படுகிறதோ அந்த திட்டம் முழுதாக மக்களை சேர வேண்டும். தேமுதிக தலைவர் பதவிக்காக மாவட்ட செயலாளர்கள் உட்பட கட்சியினர் விருப்பம் தெரிவித்துள்ள நிலையில், கேப்டன் முடிவே இறுதியானது என்று தெரிவித்தார். 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

எந்த நீதிமன்றம் சென்றாலும் ராமதாஸ் வெற்றி பெற முடியாது..! கே.பாலு சவால்!
இந்த ஸ்டாலினிடம் உங்கள் பாச்சா பலிக்காது..! தூங்கா நகரில் பாஜகவுக்கு சவால் விட்ட முதல்வர்!