துணைவேந்தர் நியமனத்தில் ஊழல் நடத்திருந்தால் அதற்கு ஆளுநர்தான் பொறுப்பு.. மாஜி அமைச்சர் கே.பி அன்பழகன் பதிலடி.

By Ezhilarasan BabuFirst Published Oct 22, 2022, 4:52 PM IST
Highlights

துணைவேந்தர் நியமனம் என்பது முழுக்க முழுக்க ஆளுநரை சார்ந்தது என்றும், இதில் ஏதாவது ஊழல் நடந்திருந்தால் இதற்கு முழு பொறுப்பு ஆளுநர்தான் என்றும் முன்னாள் உயர் கல்வித்துறை அமைச்சர் கே. பி அன்பழகன்  குற்றஞ்சாட்டியுள்ளார். 

துணைவேந்தர்கள் நியமனம் என்பது முழுக்க முழுக்க ஆளுநரை சார்ந்தது என்றும், இதில் ஏதாவது ஊழல் நடந்திருந்தால் இதற்கு முழு பொறுப்பு ஆளுநர்தான் என்றும் முன்னாள் உயர் கல்வித்துறை அமைச்சர் கே. பி அன்பழகன்  குற்றஞ்சாட்டியுள்ளார். தமிழகத்தில் ஆளுநராக பணிபுரிந்த நான்கு ஆண்டுகள் மிகவும் மோசமானதாக இருந்தது என்றும், தமிழகத்தில் துணைவேந்தர் பதவியில் 40 முதல் 50 கோடிக்கு விற்கப்படும்  சூழல் இருந்தது என்றும் முன்னாள் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் குற்றம்சாட்டியுள்ள நிலையில் கேபி அன்பழகன் இவ்வாறு பதிலடி கொடுத்துள்ளார்.

தமிழகத்தின் முன்னாள் ஆளுநரும் தற்போதைய பஞ்சாப் மாநிலத்தின் ஆளுநராக இருப்பவர் பன்வாரிலால் புரோகித். இவர் ஆர்.என் ரவிக்கு முன்னர் தமிழகத்தில் ஆளுநராக  இருந்தார், ஆளுநராக பொறுப்பேற்றவுடன் தமிழகம் முழுவதும் அரசு அலுவலங்களில் ஆய்வு மேற்கோண்டு சர்ச்சையை ஏற்படுத்தினார். பின்னர் அப்போதய எதிர்க்கட்சியான திமுக மற்றும் அதன் கூட்டசி கட்சிகள் நடத்திய போராட்டத்தின் எதிரோலியாக ஆய்வுக்கு செல்வதை நிறுத்திக் கொண்டார். பின்னர் பஞ்சாப் மாநிலத்திற்கு மாறுதல் பெறும்வரை தமிழகத்தில் இருக்கும் இடம் தெரியாமல் இருந்தார். 

இதையும் படியுங்கள்:  தமிழகத்தில் ஆளுநராக 4 ஆண்டுகள் இருந்தது மிக கொடுமை.. துணைவேந்தர் பதவி 40 கோடிக்கு விற்பனை.. பன்வாரிலால்.!

இந்நிலையில்தான் பஞ்சாப் மாநிலத்தில் ஆளுநராக இருந்து வருகிறார். அங்கும் அம்மாநில அரசுடன் மோதல் போக்கையே கடைபிடித்து வருகிறார். இந்நிலையில்தான் தமிழகத்தில் பணியாற்றிய அனுபவம் குறித்து அவர் பகீர் கருத்துகளை பகிர்ந்து கொண்டுள்ளார். அதில், கடந்து 2017 முதல் 2011 வரை தமிழக ஆளுநராக இருந்த அனுபவம் மிகவும் மோசமாக இருந்தது, தமிழகத்தில் துணைவேந்தர் பதவி 40 முதல் 50 கோடி ரூபாய்க்கு வரை விற்கப்படும் சூழல் இருந்தது. ஆனால் நான் அங்கு இருந்தவரை சட்டப்படி துணைவேந்தரை நியமித்தேன். எனவே இதுபோன்ற பணிகளை எப்படி செய்ய வேண்டும் என்பது குறித்து பஞ்சாப் மாநில அரசு என்னிடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டும் என அவர் கூறினார்.

பன்வாரிலால் புரோகித் இந்த பேச்சு தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது, இந்நிலையில் பன்வாரிலால் புரோகித் இந்த குற்றச்சாட்டுக்கு அப்போதைய உயர்கல்வித் துறை அமைச்சராக இருந்த முன்னாள் அமைச்சர் கே.பி அன்பழகன் மறுப்பு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக கேபி அன்பர்கள் கூறியிருப்பதாவது, துணைவேந்தர் நியமனம் என்பது முழுக்க முழுக்க ஆளுநரை சார்ந்தது, இதில் தவறு நடந்திருந்தால் அதற்கு முழு பொறுப்பு ஆளுநரே, துணைவேந்தர்கள் நியமனத்தில் பணம் கைமாறி இருந்தால் அது முன்னாள் ஆளுநர்தான் பொறுப்பு.

இதையும் படியுங்கள்: தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம்.. இபிஎஸ் மீது வழக்குப்பதிவா? அமைச்சர் ரகுபதி சொன்ன பரபரப்பு தகவல்.!

துணைவேந்தர் நியமனத்தில் அதிமுக அரசுக்கும் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை. துணைவேந்தர் நியமனத்தில் அரசு தலையிட்டு பட்டியல் கொடுத்திருந்தால் அவர் சொல்வதை ஏற்கலாம், 22 துணைவேந்தர்கள் தகுதி அடிப்படையில் நியமித்ததாக பன்வாரிலால் கூறுகிறார். அப்படி இருக்கும்போது இதில் அரசின் தலையீடு எதுவும் இல்லை, இவ்வாறு கேபி அன்பழகன் கூறியுள்ளார்.
 

click me!