பட்டியல் மக்கள் ஒன்றுபட்டால் பிரதமர் நாங்கதான்... படை திரட்டும் திருமாவளவன்..!

Published : Jan 12, 2022, 06:10 PM IST
பட்டியல் மக்கள் ஒன்றுபட்டால் பிரதமர் நாங்கதான்... படை திரட்டும் திருமாவளவன்..!

சுருக்கம்

பட்டியல் மக்கள் ஒன்றுபட்டால் பிரதமர் நாங்கதான் என விசிக தலைவரும், எம்.பியுமான திருமாவளவன் தெரிவித்துள்ளார்.  

பட்டியல் மக்கள் ஒன்றுபட்டால் பிரதமர் நாங்கதான் என விசிக தலைவரும், எம்.பியுமான திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

அகில இந்திய அளவிலே ஓபிசி மாணவர்களுக்குப் இட ஒதுக்கீடு இல்லை என்பதை கண்டறிந்து மத்திய அரசிடம் முதன் முறையாக சுட்டிக்காட்டிய முதல் கட்சி விடுதலை சிறுத்தைகள் கட்சி. எஸ்.டி.,எஸ்.சிக்கு எல்லாம் கிடைச்சிருக்கு நான் அதைப்பற்றி பேசணும்னு போகலாம் இல்லையா..? ஏனென்றால் உனக்கு இருக்கிற சாதி புத்தி எனக்கு கிடையாது. நீ எனக்கு ஓட்டுப்போடு, போடாமல் போ... கீழ்சாதி எறு சொல். மேல் சாதி என்று சொல். அதைப்பற்றியெல்லாம் நான் கவலைப்படப்போவதில்லை.

நீ சொல்வதனால் நான் கீழ் சாதி ஆக மாட்டேன். எனக்கு சாதி என்கிற அமைப்பின் மீதே நம்பிக்கை இல்லை. பிறகு எதற்கு கீழ் சாதி, மேல் சாதி. தலித்கள் இந்து சமயத்தை விட்டு வெளியேறி மதம் மாறினால் அவர்கள் வலு குறைந்துவிடும். ஒரு குடும்பம் பல மதக் குழுக்களாகப் பிரிந்து, சிறுபான்மையினராகவே இருந்து, தொடர்ந்து துன்பப்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்து மதத்தை விட்டு வெளியேறுவது பரவாயில்லை, ஆனால் நீங்கள் இந்து மதத்துக்குள் இருந்தால், தலித் மக்கள் தொகை அதிகமாக இருக்கும்,  எண்ணிக்கை பலம் இருக்கும். ஆகவே, தலித்கள் இந்து சமயத்தை விட்டு வெளியேறி மதம் மாறினால் அவர்கள் வலு குறைந்துவிடும்.

உலகளாவிய மதமாக கிறிஸ்துவமும், இஸ்லாமியமும் உருவாகியுள்ளது, இந்து மதம் உலக மதமாக மாறவில்லை ஏன்? இந்து மதம் சார்ந்த தலைவர்கள் சிந்திக்கவேண்டும். அரசியல் மனிதநேயம், சாதியின் பெயரால் பிரிவுகள் கொண்ட மதமாக இந்து மதம் உள்ளதால் உலக நாடுகள் ஏற்கவில்லை. ஆர்எஸ்எஸ்காரரர்கள் எங்களுக்கானவர் என்று கூறுவது போல சீமானின் செயல்பாடு மாறிவிட்டது.

மீண்டும் பாஜக ஆட்சிக்கு வருவது ஜனநாயகம் மற்றும் நாட்டிற்கு பாதுகாப்பு இல்லை. நாட்டை எவ்வாறு காப்பாற்றுவது என்ற அச்சம் உருவாகியுள்ளது. 2024ல் பாஜக ஆட்சிக்கு வருவதைத் தடுக்க அனைவரும் ஒண்றினைய வேண்டும். 

’’ என்று அவர் தெரிவித்துள்ளார்.

PREV
click me!

Recommended Stories

எந்த நீதிமன்றம் சென்றாலும் ராமதாஸ் வெற்றி பெற முடியாது..! கே.பாலு சவால்!
இந்த ஸ்டாலினிடம் உங்கள் பாச்சா பலிக்காது..! தூங்கா நகரில் பாஜகவுக்கு சவால் விட்ட முதல்வர்!