கொரோனா அறிகுறி இருந்தால் அச்சம் வேண்டாம்.. முகக்கவசம் ஆயுதம் என்றால், தடுப்பூசி பேராயுதம்.. விஜயபாஸ்கர்.!

By vinoth kumarFirst Published Jun 3, 2021, 1:38 PM IST
Highlights

கருப்பு பூஞ்சை நோய்க்கு சிகிச்சை அளிப்பதற்கு சென்னையில் சிகிச்சை மையம் அமைத்திருப்பதைப் போன்று, மண்டல அளவில் சிகிச்சை மையம் ஏற்படுத்த வேண்டும் என விஜயபாஸ்கர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கருப்பு பூஞ்சை நோய்க்கு சிகிச்சை அளிப்பதற்கு சென்னையில் சிகிச்சை மையம் அமைத்திருப்பதைப் போன்று, மண்டல அளவில் சிகிச்சை மையம் ஏற்படுத்த வேண்டும் என விஜயபாஸ்கர் வேண்டுகோள் விடுத்துள்ளார். 

விராலிமலை, இலுப்பூர் ஆகிய அரசு மருத்துவமனைகள் முதன்முறையாக விஜயபாஸ்கர் ஆய்வு செய்தார். பின்னர், அங்கு பணிபுரியும் தூய்மைப் பணியாளர்களுக்கு கொரோனா நிவாரணப் பொருட்களை வழங்கினார்.இதனையடுத்து, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர்;- தமிழகத்தில் கிராமப்புற மக்களிடம் தடுப்பூசி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதோடு, கூடுதல் முகாம் அமைத்துத் தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். கருப்பு பூஞ்சை நோய்க்கு சிகிச்சை அளிப்பதற்கு சென்னையில் சிகிச்சை மையம் அமைத்திருப்பதைப் போன்று, மண்டல அளவில் சிகிச்சை மையம் ஏற்படுத்த வேண்டும்.

முகக்கவசம் ஆயுதம் என்றால், தடுப்பூசி பேராயுதம். எனவே, அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும். கொரோனா அறிகுறி இருந்தால் அச்சமின்றி, தாமதமின்றி அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்குச் செல்ல வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.

விஜயபாஸ்கர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டதையடுத்து அவரை இலுப்பூர் அரசு மருத்துவமனையில் நேரில் பார்த்ததும் அங்கிருந்த பெண்கள் கண் கலங்கினர். அவர்களுக்கு ஆறுதல் கூறினார். அப்போது எனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதில் இருந்து 5 நாட்களுக்கு மிகவும் சிரமமாகவே இருந்தது. அதன் பிறகு எந்தப் பிரச்சினையும் இல்லை. தற்போது வேகமாக நடந்தால் மட்டும் மூச்சுத்திணறல் வருகிறது. அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொண்டு பாதுகாப்பாக இருங்கள் என்று விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

click me!