ஆளுநரை வெளியேற்றாவிட்டால் தமிழகத்தில் மிகப்பெரிய பாதிப்பு ஏற்படும் - எஸ்டிபிஐ எச்சரிக்கை

By Velmurugan s  |  First Published Jul 11, 2023, 10:04 AM IST

தமிழகதை்தை விட்டு ஆளுநரை வெளியேற்றும் முடிவை அரசு அதிரடியாக எடுக்க வேண்டும். ஆளுநரை வெளியேற்றாவிட்டால் மாநிலத்திற்கு மிகப்பெரிய பாதிப்பு ஏற்பட  வாய்ப்பு உள்ளதாக எஸ்டிபிஐ மாநிலத் தலைவர் நெல்லை முபாரக் எச்சரித்துள்ளார்.


திருச்சியில் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் தென்மாவட்ட தலைவர்கள் கூட்டம் கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த எஸ்.டி.பி.ஐ. மாநில தலைவர் நெல்லை முபாரக், இந்தியாவின் 21வது சட்ட ஆணையம் இந்தியாவில் பொது சிவில் சட்டம் தேவையில்லை என கூறிய நிலையில், 22வது சட்ட ஆணையம் கடந்த ஜூன் 14ல் பொதுசிவில் சட்டம் குறித்து மத அமைப்புகள் மற்றும் பொதுமக்களின் கருத்துகளைக் கேட்டுள்ளது. 

ஜூலை 14ம் தேதி வரை தங்கள் கருத்துக்களைத் தெரிவிக்கலாம் என ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் எதிர்வரும் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் பொதுசிவில் சட்ட மசோதாவைத் தாக்கல் செய்யவும் ஒன்றிய பாஜக அரசு திட்டமிட்டு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

Tap to resize

Latest Videos

ஒன்றிய பாஜக அரசின் இந்த நடவடிக்கைக்கு எதிராக இந்தியா முழுவதும் கடும் எதிர்ப்புகள் எழுந்துள்ளன. தமிழகத்தில் பாஜக தவிர்த்து அனைத்துக் கட்சிகளும் ஒரேகுரலில் தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளன. இத்தகைய வகுப்புவாத நடவடிக்கைக்கு எதிராக ஒன்றிய அரசின் முயற்சிக்கு எதிராக, மற்ற மாநிலங்களுக்கு ஒரு முன்மாதிரியாகத் தமிழக அரசும் சட்டமன்றத்தில் பொதுசிவில் சட்ட மசோதா தீர்மானத்தைக் கொண்டுவர வேண்டும்.

தென்காசி உள்பட 6 புதிய மாவட்டங்களில் விரைவில் மருத்துவக்கல்லூரி - அமைச்சர் சுப்பிரமணியன்

ஒன்றிய பாஜக அரசின் நடவடிக்கைக்கு எதிராக நாடு முழுவதும் ஜனநாயக சக்திகளை ஒன்றிணைத்து எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் இம்மாதம் 15ம் தேதி சென்னையிலும், 16ம் தேதி மதுரையிலும் மக்கள் திரள் போராட்டத்தை நடத்த உள்ளது. இன்று தமிழகத்தில் பதிவு துறை மேற்கொள்ளப்படும் ஆவண பதிவு உள்ளிட்ட பணிகளுக்கு சேவை கட்டினங்கள் உயர்ந்துள்ளது  இந்த கட்டணங்களை தமிழக அரசு உடனடியாக குறைக்க வேண்டும்.

திமுகவின் தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்ட மகளிர் தொகையான ரூபாய் ஆயிரம் அனைத்து மகளிர்க்கும் சென்றடையும் வகையில் தளர்வுகளை ஏற்படுத்த வேண்டும். மேலும் 25 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் இஸ்லாமிய கைதிகளை கருணை அடிப்படையில் விடுவிக்க தமிழக அரசு அமைச்சரவையில் தீர்மானத்தை ஏற்ற வேண்டும்.

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை வில்லனாக சித்தரிக்க வேண்டாம் என அண்ணாமலை கூறுகிறார். தமிழ்நாட்டில்  இரண்டு ஐ.பி.எஸ்.சால் தமிழ்நாட்டில் எந்த பயனும் இல்லை. ஆளுநரை வெலியேற்றுவது குறித்து இனி யாரிடமும் கெஞ்ச வேண்டாம். அவரை வெளியேற்றுவது குறித்து கடுமையான முடிவை தமிழ்நாடு அரசு எடுக்க வேண்டும். ஆளுநரை வெளியேற்றாவிட்டால் மிகப்பெரிய பாதிப்பு தமிழ்நாட்டில் ஏற்படும்.

இமானுவேல் சேகரன் புகைப்படத்தை சேதப்படுத்திய மர்ம நபர்கள் - தூத்துக்குடியில் பதற்றம்

தமிழ்நாட்டில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும். மது தான் அனைத்து வித போதைகளுக்கும் அடிப்படை எனவே பூரண மதுவிலக்கு தேவை. மேகத்தாட்டு அணை விவகாரத்தில் மாநிலத்தின் உரிமை காக்கப்பட வேண்டும். மேகதாட்டுவில் அணைக்கட்ட விடமாட்டோம் என தமிழ்நாடு அரசு தொடர்ந்து கூறி வருகிறது. இந்த விவாகரத்தில் தமிழ்நாடு அரசுக்கு முழு ஆதரவு அளிப்போம் என தெரிவித்தார்.

click me!