அமைச்சர் செந்தில் பாலாஜியின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீடுகளில் வருமான வரித்துறை ஏற்கனவே இரண்டு முறை சோதனை நடத்திய நிலையில், தற்போது கரூரில் மூன்றாவது கட்டமாக மீண்டும் வருமானவரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
செந்தில் பாலாஜிக்கு செக் வைக்கும் ஐ.டி துறை
அமைச்சர் செந்தில் பாலாஜியின் உறவினர்கள் மற்றும் நண்பர்களின் வீடுகளில் வருமான வரித்துறை சோதனை நடத்தி முக்கிய ஆவணங்களை கைப்பற்றியது. கடந்த மே மாதம் 26ஆம் தேதி வருமான வரி சோதனையானது 8 நாட்கள் வரை நடைபெற்றது. அதனை தொடர்ந்து ஜீன் 23ஆம் தேதி இரண்டாவது கட்டமாக இரண்டு நாட்கள் சோதனை நடைபெற்றது.இந்த சோதனையின் போது முக்கிய ஆவணங்களை வருமான வரித்துறையினர் பறிமுதல் செய்திருந்தனர்.
undefined
3வது கட்டமாக மீண்டும் சோதனை
இந்தநிலையில் மீண்டும் 3 வது கட்டமாக வருமான வரித்துறையினர் செந்தில் பாலாஜியின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீடுகளில் சோதனை நடத்தி வருகிறது. இந்த சோதனையானது கரூரில் உள்ள 10 இடங்களில் தற்போது நடைபெற்று வருகிறது. கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட ராயனூர் பகுதியில் அமைந்துள்ள கொங்கு மெஸ் உணவக உரிமையாளர் மணி என்ற சுப்பிரமணி வீட்டில் சோதனை தொடங்கியுள்ளது. இரண்டு வாகனங்களில் வந்த ஐந்து அதிகாரிகள் சோதனை நடத்துகின்றனர். ஏற்கனவே வருமான வரித்துறையினரை செந்தில் பாலாஜியின் ஆதரவாளர்கள் தாக்கிய சம்பவம் நடைபெற்றதையடுத்து தற்போது த்திய துணை ராணுவ படை வீரர்களின் பலத்த பாதுகாப்புடன் சோதனையை அதிகாரிகள் தொடங்கியுள்ளனர்.
இதையும் படியுங்கள்