சசிகலா அ.தி.மு.க.வை கையிலெடுத்தால் சந்தோஷப்படும் மொத ஆளு நான் தான்!: மார்தட்டும் எம்.எல்.ஏ!!

By Vishnu PriyaFirst Published Sep 19, 2019, 6:02 PM IST
Highlights

நடிகர்  கருணாஸை எல்லோரும் காமெடியனாக பார்த்துக் கொண்டிருந்த நேரத்தில், அவரை ஒரு அரசியல்வாதியாக பார்த்து, அவருக்கு எம்.எல்.ஏ. ஸீட் வாங்கிக் கொடுத்து, ஜெ., புண்ணியத்தில் ஜெயிக்கவும் வைத்தார் சசிகலா. அந்த நன்றியை என்றும் மறவாதவர் கருணாஸ். அதனால்தான் இவ்வளவு பிரச்னைகள் வந்த போதும் கூட, எடப்பாடியாரை பல முறை சந்திக்க வேண்டிய சூழல்கள் வந்தபோதும் கூட ‘நான் தைரியமாக சொல்வேன், நான் என்றும் சசியின் விசுவாசி’ என்று ! என்கிறார். 

தமிழகத்தில் தொழில் முதலீடுகளுக்காக வெளிநாட்டு சுற்றுப்பயணங்களை முடித்துவிட்டு வந்திருக்கும் எடப்பாடியாரை சந்தித்து வாழ்த்துகிறார் ஒரு புறம்! சசிகலாவை சந்திரலேகா சந்தித்த்து பற்றி ஹேப்பி எமோஜி போடுகிறார் மறுபுறம். கருணாஸின் கதைதான் என்ன? என்று அவரிடம் கேட்டால் “சின்னம்மா சசிகலாவுக்கு நான் வாழ்நாள் விசுவாசி. இன்றும், என்றும் அதில் மாற்றமில்லை. அனால் அதேவேளையில் என் தொகுதி மக்களின் பிரச்னைகளை தீர்த்திட தமிழக முதல்வரை நான் சந்திக்க வேண்டியுள்ளது, அது கடமை. 

சசிகலாவை சந்திரலேகா சந்தித்தது பற்றி பரபரப்பாய் பேசுகிறார்கள். அது பர்ஷனல் சந்திப்பாக கூட இருக்கலம். ஆனால் ஒன்று, அதற்கு சொல்லப்படும் காரணங்களில் ஒன்றான ‘அ.தி.மு.க.வை சசிகலா தலைமை தாங்குவார்’ எனும் தகவல் மட்டும் உண்மையானால் அதற்காக பெரும் மகிழ்ச்சி அடையும் முதல் நபர் நான் தான். சசிகலா, இ.பி.எஸ்., ஓ.பி.எஸ். மூவரும் கழகத்தில் பல ஆண்டுகள் ஒன்றாக இருந்து அரசியல் செய்தவர்கள். நானெல்லாம் நேற்று பெய்த மழையில் முளைத்த காளான். 

புரட்சித்தலைவரால் உருவாக்கப்பட்டு, அம்மாவால் கட்டி வானுயர எழுப்பப்பட்ட இந்த இயக்கம் தளர்ந்துவிடாமல் தோள் கொடுக்கும் சக்தி சின்னம்மா சசிகலாவிடம் உள்ளது. அம்மாவிடம் அந்த நுணுக்க அரசியலை, தைரிய அரசியலை அவர் கற்றுத் தேர்ந்துள்ளார். எனவே சசிகலா இந்த கட்சியின் தலைமையை ஏற்றால் நான் பெரும் மகிழ்ச்சியடைவேன்.” என்கிறார். 

ஆக கருணாஸுக்கு சீசன் 2 ஆசை வந்துடுச்சுடோய்!

click me!