முரசொலி நிலம்: மன்னிப்பு கேட்டால் வழக்கு வாபஸ்... டாக்டர் ராமதாஸுக்கு சாய்ஸ் கொடுத்த திமுக!

By Asianet TamilFirst Published Dec 21, 2019, 8:16 AM IST
Highlights

கடந்த அக்டோபர் மாதம் ‘அசுரன்’ படத்தைப் பார்த்த திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், ‘இது படம் அல்ல பாடம்’ என டிவிட்டரில் கருத்து தெரிவித்திருந்தார். இந்தப் பதிவுக்கு பதில் அளித்த பாமக நிறுவனர் ராமதாஸ், ‘முரசொலி அலுவலகம் அமைந்துள்ள இடமே பஞ்சமி நிலம்தான்’ என்று தெரிவித்திருந்தார். இதற்கு திமுக தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதோடு, அந்த நிலத்தின் பட்டாவை திமுக வெளியிட்டது. ஆனால், மூலப்பத்திரம் எங்கே என ராமதாஸ் கேள்வி எழுப்பினர்

 நீதிமன்றத்தில் முரசொலியின் மூலப் பத்திரத்தை திமுக தாக்கல் செய்துள்ள நிலையில், இந்த விவகாரத்தை கிளப்பிய டாக்டர் ராமதாஸ் மன்னிப்பு கேட்டால், அவதூறு வழங்கை திரும்ப பெறுவதாக திமுக எம்.பி. ஆர்.எஸ். பாரதி தெரிவித்துள்ளார்.


கடந்த அக்டோபர் மாதம் ‘அசுரன்’ படத்தைப் பார்த்த திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், ‘இது படம் அல்ல பாடம்’ என டிவிட்டரில் கருத்து தெரிவித்திருந்தார். இந்தப் பதிவுக்கு பதில் அளித்த பாமக நிறுவனர் ராமதாஸ், ‘முரசொலி அலுவலகம் அமைந்துள்ள இடமே பஞ்சமி நிலம்தான்’ என்று தெரிவித்திருந்தார். இதற்கு திமுக தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதோடு, அந்த நிலத்தின் பட்டாவை திமுக வெளியிட்டது. ஆனால், மூலப்பத்திரம் எங்கே என ராமதாஸ் கேள்வி எழுப்பினர். இந்த விவகாரத்தில் புகுந்த பாஜக மாநில செயலாளர், திமுக மீது தேசிய எஸ்.சி./எஸ்.டி. ஆணையத்தில் புகார் அளித்தார். அதுதொடர்பான விசாரணை நிலுவையில் உள்ளது.
இந்நிலையில் பஞ்சமி நிலம் அவதூறு கிளப்பியதாக திமுக எம்.பி.யும், முரசொலி அறங்காவலருமான ஆர்.எஸ்.பாரதி சென்னை, எழும்பூர் 14வது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கை டாக்டர் ராமதாஸ், சீனிவாசன் ஆகியோர் மீது தொடர்ந்தார். இந்த வழக்கு ஆர்.எஸ்.பாரதி ஆஜராகி சத்திய பிரமாண வாக்குமூலம் அளித்தார். மேலும் முரசொலி நிலத்தின் மூல  ஆவணங்களையும் 83 ஆண்டுகளுக்கு உண்டான ஆவணங்களையும் ஆர்.எஸ். பாரதி சமர்ப்பித்தார். 
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஆர்.எஸ்.பாரதி, “முரசொலி நிலம் தொடர்பாக இதன் பிறகாவது உண்மையை உணர்ந்து  டாக்டர் ராமதாஸ், சீனிவாசன் ஆகியோர் மன்னிப்பு கோர வேண்டும். அப்படி இருவரும் மன்னிப்பு கோரும்பட்சத்தில், திமுக தலைவரின் ஒப்புதலைப் பெற்று இந்த அவதூறு வழக்குகளை திரும்பப் பெற தயாராக உள்ளோம்” என்று தெரிவித்தார்.

click me!