திருமாவளவன், நடிகர் சித்தார்த் மீது பாய்ந்த வழக்கு !!

Published : Dec 21, 2019, 07:59 AM IST
திருமாவளவன், நடிகர் சித்தார்த் மீது பாய்ந்த வழக்கு !!

சுருக்கம்

குடியுரிமை சட்டத்துக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், நடிகர்  சித்தார்த் உள்பட 800 பேர் மீது  போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

குடியுரிமை சட்டத்துக்கு எதிராக தமிழகத்தில் தொடர்ந்து போராட்டம் நடந்து வருகிறது. சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில்  அனுமதியின்றி போராட்டம் நடைபெற்றது. ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக சென்னை மெரினா கடற்கரையில் மாணவர்கள் ஒன்று கூடி நடத்திய போராட்டம் மிகுந்த வர வேற்பை பெற்றிருந்தது. 

அதனை போன்றே குடியுரிமை சட்டத்துக்கு எதிராகவும் வள்ளுவர் கோட்டத்தில் இளைஞர்கள் திரளாக திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக இளம்பெண் களும், இளைஞர்களும் கைகளில் பதாகைகளை ஏந்தி வந்திருந்தனர். அதே போன்று குடி யுரிமை சட்டத்துக்கு எதிரான அச்சிட்ட வாசகங்களை இளம்பெண்கள் பலர் கைகளில் ஏந்தி இருந்தனர்.

மாணவர்கள் பெருமளவில் பங்கேற்ற இந்த போராட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், நடிகர் சித்தார்த்,  கர்நாடக இசைப் பாடகள் டி.எம்.கிருஷ்ணா உள்பட பலர் கலந்து கொண்டனர். 

மொத்தம் 54 அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் இந்த போராட்டத்தில் பங்கேற்றனர். இவர்கள் மீது சட்ட விரோதமாக கூடியது உள்ளிட்ட சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு. 800 பேர் மீது வழக்கு போடப்பட்டுள்ளது.

PREV
click me!

Recommended Stories

Vijay vs Stalin: இடைத்தேர்தலை புறக்கணிக்கும் திமுக.! முன் வைத்த காலை பின் வைக்கிறதா?! மீண்டும் மேலே பறக்கும் விசில் கொடி.!
TN Assembly byelection Candidate: இடைத்தேர்தல் யுத்தம்.! விசில் சின்னத்தில் போட்டியிடும் அதிமுக முகங்கள்.! செக் மேட் யாருக்கு?