ரஜினி அ.தி.மு.க.வுக்கு வந்தா என்ன பண்ணுவீங்க?: அமைச்சர் ஜெயக்குமாரின் அதிரடி பதில்

By Vishnu PriyaFirst Published Feb 19, 2020, 5:21 PM IST
Highlights

”ரஜினி அரசியல் களத்துக்கு வந்தால் ஆதரவு தெரிவிப்பீர்களா? என்று கேட்கிறார்கள். நான் சொல்கிறேன், அ.தி.மு.க.வில் யார் வந்து சேர்ந்தாலும் இணைத்துக் கொள்வோம். இப்போதைய நிலவரப்படி அ.தி.மு.க.வில் தலைமைக்கான வெற்றிடம் என்பது இல்லை. 

ரஜினி அரசியலுக்கு வந்து, கட்சி துவங்கி, தேர்தலை சந்தித்து, வென்று, முதல்வராகி, புகழ் பெற்று, தமிழ்நாட்டுக்கு நல்லது செய்து!........இதெல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும். ஆனால் இன்று வரையில் வெறும் ஒரு வாக்காளனாக மட்டுமே அரசியல் இருக்கக் கூடிய ரஜினிகாந்தை சுற்றியே தமிழகத்தின் மொத்த அரசியலும் இயங்குவதுதான் அவரது மிகப்பெரிய சகஸஸ்ஸே! கட்சியே துவக்காத அவரை திட்டியும், வரவேற்றும், விமர்சித்தும், யூகம் செய்து வாய் வலிக்கப் பேசி சலிக்கின்றனர் அத்தனை கட்சிகளின் தலைவர்களும். ரஜினி அரசியலுக்கு வந்தால் ஒருவேளை பெறலாம் எனும் வெற்றியை விட மிகப்பல மடங்கு பெரிதாய் பார்க்கப்படுகிறது இப்போதே அவரைப் பற்றி இவர்கள் பதறிப்பேசும் பேச்சுகள்.  அதிலும் அ.தி.மு.க.வின் பதற்றம் பெரும் பதற்றமாக இருக்கிறது.

காரணம், கட்சி துவங்கும் ரஜினி, பா.ஜ.க.வின் அழுத்தத்தின் பேரில் அ.தி.மு.க. கூட்டணிக்கு நுழையலாம். ஆனால் முதல்வர் வேட்பாளர் எனும் டைட்டிலுடன் தான் உள்ளே வருவார். அவருக்கு அதை அ.தி.மு.க. விட்டுக் கொடுக்குமா? தலைமை நிர்வாகிகள் விட்டுக் கொடுத்தால் தொண்டர்களும், அக்கட்சியின் ஆதரவு வாக்குவங்கியான மக்களும் ஏற்பார்களா என்பது சிரமமே. இதனால் அக்கூட்டணிக்குள் சர்ச்சை உருவாகும். ஒருவேளை ரஜினியும், பா.ஜ.க.வும் இணைந்து நின்றால், ரஜினி பிரிக்கப்போவது அ.தி.மு.க. வாக்கு வங்கியின் பெரும்பான்மையான ‘சினிமா ஆதரவு வாக்குகளை’தான். மேலும் இந்துக்களின் வாக்குகளும் அ.தி.மு.க.விடம் இருந்து ரஜினிக்கு பெரும்பான்மையாக போகும். 
ஆக எப்படி பார்த்தாலும் ரஜினி அரசியலால் நமக்கு பாதகமில்லை என்பதே தி.மு.க.வின் கணக்கு. 


எனவே ரஜினையை நினைத்து பதறுகிறது அ.தி.மு.க. இச்சூழலில் அக்கட்சியின் மிக முக்கிய மவுத் பீஸான அமைச்சர் ஜெயக்குமார் என்ன சொல்கிறார் தெரியுமா?....”ரஜினி அரசியல் களத்துக்கு வந்தால் ஆதரவு தெரிவிப்பீர்களா? என்று கேட்கிறார்கள். நான் சொல்கிறேன், அ.தி.மு.க.வில் யார் வந்து சேர்ந்தாலும் இணைத்துக் கொள்வோம். இப்போதைய நிலவரப்படி அ.தி.மு.க.வில் தலைமைக்கான வெற்றிடம் என்பது இல்லை. ரஜினி அ.தி.மு.க.வில் சேர்வாரா என்பது தெரியாது. ஆனால் சசிகலா மற்றும் அவரது உறவினர்களைத் தவிர யார் வந்தாலும் சேர்த்துக் கொள்வோம் எங்கள் கட்சியில். ரஜினி வந்தாலும் வரவேற்போம், அவரை சேர்ப்போம். ஒருவேளை அவர் தனிக்கட்சி துவக்கினால், அப்போதைய சூழலைப் பொறுத்து முடிவு செய்வோம்.” என்கிறார். என்னா தெளிவு!?

click me!