சிஏஏ போராட்டத்திலும் துப்பாக்கிச்சூடு நடத்த பார்க்கிறரா எடப்பாடி..? முக்கிய விஷயத்தை உணர்த்தும் கனிமொழி..!

By vinoth kumarFirst Published Feb 19, 2020, 5:15 PM IST
Highlights

குடியுரிமை திருத்தச் சட்டம், என்.பி.ஆர், என்.ஆர்.சி ஆகியவற்றுக்கு எதிராக சென்னை முதல் கன்னியாகுமரி வரை தமிழகம் முழுவதும் கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக போராட்டங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில், தமிழகத்தில் பட்ஜெட் தாக்கல் செய்த வெள்ளிக்கிழமை இரவு குடியரிமை சட்டத்துக்கு எதிராக போராட்ஙடம் நடதம்தியவர்கள் மீது போலீசார் திடீரென தடியடி நடத்தினர். இதனையடுத்து, தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இந்த தடியடிக்கு மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட எதிர்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.  

தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டுக்கு காரணமானவர் சிஏஏ போராட்டக்கண்காணிப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டதற்கு திமுக எம்.பி.கனிமொழி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். 

குடியுரிமை திருத்தச் சட்டம், என்.பி.ஆர், என்.ஆர்.சி ஆகியவற்றுக்கு எதிராக சென்னை முதல் கன்னியாகுமரி வரை தமிழகம் முழுவதும் கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக போராட்டங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில், தமிழகத்தில் பட்ஜெட் தாக்கல் செய்த வெள்ளிக்கிழமை இரவு குடியரிமை சட்டத்துக்கு எதிராக போராட்ஙடம் நடதம்தியவர்கள் மீது போலீசார் திடீரென தடியடி நடத்தினர். இதனையடுத்து, தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இந்த தடியடிக்கு மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட எதிர்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.  

இந்த போராட்டங்களை கண்காணிக்க 6 சிறப்பு அதிகாரிகளை தமிழக டிஜிபி திரிபாதி நியமித்து உத்தரவிட்டிருந்தார். அதன்படி திண்டுக்கல் மாவட்டத்துக்கு ஜி.ஸ்டாலின், தேனி மாவட்டத்துக்கு பாஸ்கரன், தூத்துக்குடிக்கு மகேந்திரன், மதுரைக்கு அபய்குமார் சிங், நெல்லை மாவட்டத்துக்கு மகேஷ்குமார் அகர்வால் ஆகியோர் சிறப்பு அதிகாரிகளாக நியமிக்கப்பட்டனர்.

தமிழகத்தில் சிஏஏவுக்கு எதிரான போராட்டங்களைகண்காணிக்க டிஜிபி தூத்துக்குடிக்கு நியமித்துள்ள மகேந்திரனின் மேற்பார்வையில்தான்ஸ்டெர்லைட் போராட்டங்களின்போது14பேர் சுட்டு கொல்லப்பட்டனர்.இவரை நியமித்தன் மூலம் தமிழகஅரசு சிஏஏவுக்குஎதிராக போராடுபவர்களுக்கு என்ன செய்தியைஉணர்த்தவிரும்புகிறது.

— Kanimozhi (கனிமொழி) (@KanimozhiDMK)

இந்நிலையில், குடியுரிமை சட்டத்துக்கு எதிராக கண்காணிக்க மகேந்திரனை நியமிக்கப்பட்டதற்கு திமுக எம்.பி. கனிமொழி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவரது டுவிட்டர் பக்கத்தில்;- "தமிழகத்தில் சிஏஏவுக்கு எதிரான போராட்டங்களை கண்காணிக்க டிஜிபி தூத்துக்குடிக்கு நியமித்துள்ள மகேந்திரனின் மேற்பார்வையில்தான் ஸ்டெர்லைட் போராட்டங்களின்போது 14 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இவரை நியமித்தன் மூலம் தமிழக அரசு சிஏஏவுக்கு எதிராக போராடுபவர்களுக்கு என்ன செய்தியை உணர்த்தவிரும்புகிறது" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

click me!