விரைவில் நல்ல செய்தி வரும்... சட்டப்பேரவையை அதிர வைத்த முதல்வர்..!

By vinoth kumarFirst Published Feb 19, 2020, 3:24 PM IST
Highlights

தமிழக சட்டப்பேரவையில் வேளாண் மண்டல அறிவிப்பை சுட்டிக்காட்டி பேசிய எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின், ஹைட்ரோகார்பன் திட்டங்களின் நிலை என்ன? என கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி;- டெல்டா பகுதிகளைப் பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேனாண்ட மண்டலமாக மாற்றி அறிவிக்க வேண்டும் என அரசுக்கு விவசாயிகள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தனர். அவர்களுடைய கோரிக்கையை ஏற்று அண்மையில் டெல்டா பகுதிகள் பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக மாற்றப்படும் என்ற அறிவிப்பை நான் வெளியிட்டேன்.

விவசாயிகள் மகிழ்ச்சி அடையும் வகையில் ஒரு நல்ல செய்தி விரைவில் வெளிவரும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி சட்டப்பேரவையில் தகவல் தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவையில் வேளாண் மண்டல அறிவிப்பை சுட்டிக்காட்டி பேசிய எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின், ஹைட்ரோகார்பன் திட்டங்களின் நிலை என்ன? என கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி;- டெல்டா பகுதிகளைப் பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேனாண்ட மண்டலமாக மாற்றி அறிவிக்க வேண்டும் என அரசுக்கு விவசாயிகள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தனர். அவர்களுடைய கோரிக்கையை ஏற்று அண்மையில் டெல்டா பகுதிகள் பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக மாற்றப்படும் என்ற அறிவிப்பை நான் வெளியிட்டேன்.

இதையும் படிங்க;-  200 ஆபாச வீடியோக்கள்... 40 பெண்களை மயக்கி உல்லாசம்... ஃபர்ஸ்ட் நைட்டில் மனைவியை அதிரவைத்த கணவன்..!

காவிரி டெல்டா பகுதியில் மண்டலம் அறிவிப்பு தொடர்பாக சட்ட நிபுணர்களுடன் கலந்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது. இதற்கான பணிகள் தொடங்கப்பட்டு விட்டன. சரியான முறையிலே சட்ட  நிபுணர்களை கலந்து ஆலோசித்துதான் இதைக் கொண்டு வர முடியும். ஏன் என்றால் இதில் பல பிரச்சனைகள் இருக்கின்றன. சட்ட வல்லுநர்களுடன் விவாதித்து, சட்டப்பேரவையின் மூலமாக இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட நாங்கள் முயற்சி எடுத்து வருகிறோர். ஆகையால்,  டெல்டா மாவட்ட விவசாயிகளுக்கு விரைவில் நல்ல செய்தி வரும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

click me!