அமைச்சர் வேலுமணி மீதான புகாரை முடிச்சு வைங்க... உயர்நீதிமன்றத்தில் அடம்பிடிக்கும் தமிழக அரசு..!

By vinoth kumarFirst Published Feb 19, 2020, 3:04 PM IST
Highlights

சென்னை மாநகராட்சியில் டெண்டர் ஒதுக்கீட்டில் நடந்த முறைகேடுகள் குறித்து, சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்து விசாரிக்க உத்தரவிடக் கோரி, அறப்போர் இயக்கம் மற்றும் திமுகவின் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ். பாரதி ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். இந்த வழக்கை நீதிபதிகள் சத்தியநாராயணன், ஹேமலதா அமர்வு கடந்த ஓராண்டாக விசாரிக்கப்பட்டு வருகிறது.

உள்ளாட்சித்துறை அமைச்சர் வேலுமணி மீதான டெண்டர் முறைகேடு புகாரில் முகாந்திரம் இல்லை என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது. 

சென்னை மாநகராட்சியில் டெண்டர் ஒதுக்கீட்டில் நடந்த முறைகேடுகள் குறித்து, சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்து விசாரிக்க உத்தரவிடக் கோரி, அறப்போர் இயக்கம் மற்றும் திமுகவின் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ். பாரதி ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். இந்த வழக்கை நீதிபதிகள் சத்தியநாராயணன், ஹேமலதா அமர்வு கடந்த ஓராண்டாக விசாரிக்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே நடைபெற்ற விசாரணையின்போது லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டது. அதன்படி, லஞ்ச ஒழிப்பு துறையின் விசாரணை அறிக்கையையும், 200 சாட்சிகளின் வாக்குமூலத்தையும் தலைமை குற்றவியல் வழக்கறிஞர் சீலிட்ட கவரில் தாக்கல் செய்யப்பட்டது. 

இதையும் படிங்க;- வெட்ட வெளியில் பூங்காவை படுக்கை அறையாக மாற்றிய காதல் ஜோடிகள்... காமக்களியாட்டம் போடும் இளசுகள்..!

அதில், அமைச்சர் மீதான குற்றச்சாட்டுக்கு ஆதாரம் இல்லை என்றும் தெரிவித்திருந்தது. அதை பெற்றுக்கொண்ட நீதிபதிகள் எந்த விதிகளின் அடிப்படையில் இந்த விசாரணை நடத்தப்பட்டுள்ளது என்று கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த தலைமை வழக்கறிஞர் லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை குறிப்பில் லலிதா குமாரி உள்ளிட்ட வழக்குகளில் உச்சநீதிமன்றம் அளித்த வழிகாட்டுதல்களின்படியும் இந்த ஆரம்ப கட்ட விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஆரம்கட்ட விசாரணைக்கு எந்த கட்டுபாடும் இல்லை என உச்சநீதிமன்றம் சமீபத்தில் தீர்ப்பளித்துள்ளதை சுட்டிக்காட்டினார். இதனையடுத்து, வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில், மீண்டும் இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது. உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான புகாரில் முகாந்திரம் இல்லாததால் வழக்கை முடித்து வைக்க கோரி தமிழக அரசின் தலைமைச் செயலாளர் புதிய மனுவை தாக்கல் செய்திருக்கிறார். அதில், உயர்நீதிமன்ற உத்தரவுப்படி, அமைச்சர் வேலுமணிக்கு எதிரான புகார் குறித்து, சிறப்பு குழு அமைத்து விசாரித்ததாகவும், இந்த விசாரணையில், புகாரில் அடிப்படை முகாந்திரமும் இல்லை என்று தெரிய வந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். இதனால் இந்த வழக்கை முடித்துவைக்கக் கோரி அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

click me!