
நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்தால் அனைத்து வகையிலும் நல்லது செய்வார் என்று லதா ரஜினிகாந்த் கூறியுள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ரசிகர் மன்ற நிர்வாகிகள் சந்திப்பின்போது, தனது அரசியல் பிரவேசம் குறித்து இலைமறைகாயாக கூறியிருந்தார். இதனால் அவரது ரசிகர்கள் உற்சாகத்தின் எல்லைக்கே சென்றிருந்தனர்.
ரஜினிகாந்த் நடிப்பில் காலா திரைப்படத்தின் இறுதிகட்ட பணிகள் நடைபெற்று வருகின்றனர். நடிகர் ரஜினிகாந்த் விரைவில் அரசியலுக்கு வருவார் என்று காந்திய மக்கள் இயக்கத்தின் தலைவர் தமிழருவி மணியனும் கூறி வந்தார். ரஜினி அரசியலுக்கு விரைவில் வருவார்
என்பது குறித்து தமிழகம் மட்டுமல்ல இந்தியாவே எதிர்பார்த்து வருகிறது.
இந்த நிலையில், நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்தால் நல்லது செய்வார் என்று லதா ரஜினிகாந்த் கூறியுள்ளார். சென்னையில் உள்ள ஸ்ரீதயா அறக்கட்டளை சார்பில் குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இந்த விழிப்புண்ரவு நிகழ்ச்சியில் நடிகர்
ரஜினிகாந்தின் மனைவி லதா ரஜினிகாந்த் கலந்து கொண்டார்.
அப்போது பேசிய அவர், ரஜினி அரசியலுக்கு வருவாரா என்பதை அவரே சொல்லுவார் என்று கூறினார். நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு எப்போது வருவார் என்பது அவருக்குத்தான் தெரியும் என்றார்.
ரஜினி அரசியலுக்கு வந்து நல்லது செய்வதற்காக 100 திட்டங்கள் அவரிடம் உள்ளதாகவும் கூறினார். நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்தால் அனைத்து வகையிலும் அவர் நல்லது செய்வார் என்றும் அரசியலுக்கு வந்தால் பல மாற்றங்கள் ஏற்படும் என்றும் லதா ரஜினிகாந்த் கூறினார்.