
பண மோசடி வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நிபந்தனை முன் ஜாமின் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தின் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தவர் செந்தில்பாலாஜி. அப்போது போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ. 95 லட்சம் மோசடி செய்ததாக செந்தில் பாலாஜி மீது புகார் எழுந்தது.
இதையடுத்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் செந்தில் பாலாஜி மீது மோசடி, கொலை மிரட்டல் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.
இதனிடையே செந்தில் பாலாஜி டிடிவி தினகரனுக்கு ஆதரவு தெரிவித்து தமது எம்.எல்.ஏ பதவியை இழந்து கர்நாடகாவில் உள்ள ரிசார்ட்டில் தங்கி உள்ளார்.
இதனால் போலீசார் அவரை கைது செய்து நடவடிக்கை எடுக்க கர்நாடகா விரைந்தனர். ஆனால் செந்தில் பாலாஜி சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கூறி மனுதாக்கல் செய்தார்.
மனுவை விசாரித்த நீதிமன்றம் வரும் செவ்வாய் கிழமை வரை செந்திபாலாஜியை கைது செய்யக்கூடாது என ஏற்கனவே உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில் இதுகுறித்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் செந்தில் பாலாஜிக்கு நிபந்தனை முன் ஜாமின் வழங்கி உத்தரவிட்டது.