கழிவறைக்கு போனாலும் மோடி அரசு கையேந்தும்.. வெட்கமில்லையா அண்ணாமலை.. டார் டாரா கிழிக்கும் ஆம் ஆத்மி.

By Ezhilarasan BabuFirst Published Aug 3, 2022, 1:19 PM IST
Highlights

ஆணவம் பிடித்த நிர்மலா சீதாராமன் நாட்டின் நிதி அமைச்சராக தொடர்ந்தால் இலங்கையைவிட இந்தியா மோசமான நிலைக்கு தள்ளப்படும் என்று ஆம் ஆத்மி கட்சியில் தமிழக தலைவர் வசீகரன் தெரிவித்துள்ளார். 

ஆணவம் பிடித்த நிர்மலா சீதாராமன் நாட்டின் நிதி அமைச்சராக தொடர்ந்தால் இலங்கையைவிட இந்தியா மோசமான நிலைக்கு தள்ளப்படும் என்று ஆம் ஆத்மி கட்சியில் தமிழக தலைவர் வசீகரன் தெரிவித்துள்ளார். கழிவறைக்கு பேனாலும் அங்கு மோடி அரசு கையேந்தும் என்றும் அவர் கண்டித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையின் விவரம் பின்வருமாறு:- 

பாஜக எதிர் கட்சியாக இருந்த போது இதே பாராளுமன்ற மைய பகுதியில் பெட்ரோல் டீசல் சமையல் எரிவாயுவை காங்கிரஸ் அரசு விலையுயர்த்தியதை கண்டித்து பாஜக எம்.பிக்கள் கோஷம் போட்டார்கள்,வெளியில் போராட்டங்கள் நடத்தினார்கள் ஸ்மிரிதி ராணி எரிவாயு சிலிண்டர் தலையில் தூக்கி வந்தார். பிரதமருக்கு வளையல் அனுப்பினார்கள்.

#வெட்கமில்லாத_நிதியமைச்சர் 
இன்று மக்கள் விரோத ஆட்சி நடத்தி வரும் பாஜக நாட்டில் பல மடங்கு விலைவாசியை உயர்த்தி விட்டு வெட்கமில்லாமல் நிதியாமைச்சர் நிர்மலா சீத்தராமன் பாராளுமன்றத்தில் எதிர்கட்சியினர் கோஷம் போடும் போது ஜனநாயகத்தில் பாஜக ரொம்ப நம்பிக்கை உள்ளவர்கள் போல நடிக்கிறார். முதலில் நாங்க சொல்றத கேளுங்க திருமதி நிர்மலா சிலிண்டர் விலையை குறைங்க பெட்ரோல், டீசல் விலையை குறைங்க அதுக்கு அப்புறம் நீங்க சொல்றதெல்லாம் கேட்கலாம்.

#வெங்காயம்_அண்ணாமலை 
அரசியல் புரியாத திரு.அண்ணாமலை அவர்களே,வெங்காயம் விலை ஏறிவிட்டது என்று நாம் சொன்னால் அதுக்கு நிதியமைச்சர் திருமதி நிர்மலா பதில் என்ன தெரியுமா நாங்கள் வெங்காயம் சாப்பிடுவது இல்லை.அண்ணாமலை நீங்க அவங்க கிட்ட போய் கேளுங்க வெங்காயம் இல்லாமல் யார் சாப்பிடுவானு இது ஒரு பதிலானு.

இதையும் படியுங்கள்: டெண்டர் முறைகேடு வழக்கு: இபிஎஸ்க்கு நிம்மதி கொடுத்த உச்சநீதிமன்றம்.. சிபிஐ விசாரணைக்கான உத்தரவு ரத்து

#மாட்டு_கோமயம் 

60ரூ இருந்த பெட்ரோல் 110  400 ரூ இருந்த கேஸ் சிலிண்டர் 1100 ரூ80 ரூ இருந்த சமையல் எண்ணெய் 200 ரூபாய் மாட்டு கோமயம் குடித்ததால் அறிவு இருக்காது சிந்திக்கவும் தெரியாது, தான் செய்கிற தவறும் தெரியாது.

#கழிவறைக்கு_வரி  பிள்ளைகள் படிக்கின்ற புத்தகம் பேனா பென்சில் பேப்பர்ரப்பர் இதுக்கும் ஜிஎஸ்டி போடறீங்க!
வரியை மீட்டர் வட்டி போல் வசூல் ஒன்றிய அரசு வசூல் செய்கிறது. பாஜக அரசு உணவு பொருள் மீதும் கை வைத்து ஆகிவிட்டன
தங்கத்திற்கு 3%, வைரத்திற்கு 1.5% அரிசி, கோதுமை, தயிர் போன்ற அத்தியாவசிய பொருட்களுக்கு 5%. ஜிஎஸ்டி கொண்டு வந்து 5 வருடம் ஆகியும் இன்னும் மக்களுக்கு ஏற்ற வரிகள் நிர்ணயிக்க தெரியவில்லை. முட்டாள் அரசாக மோடி அரசு உள்ளது. இனி பொது கழிவறைக்கு சென்றாலும் மோடி அரசு  அங்கும் கை நீட்டும் நிலை வெகு தொலைவில் இல்லை.

#திமுகவுடன்_கூட்டணி!
திமுகவுடன் கூட்டணி கிடையாது என்று சொல்லக்கூட உங்களுக்கு நேரிடையாக தகுதி இல்லை மிஸ்டர்  அண்ணாமலை?
நாளைக்கே உங்க மோடிஜி ஆர்டர் போட்டா அந்த வேலையை செய்கின்ற அளவில்தான் உங்க அதிகாரம்!
விவசாய சட்டத்தைப் பற்றி உங்க இஷ்டத்திற்கு பேசுனீங்க, ஒன்றிய அரசு இச்சட்டத்தை வாபஸ் பெறவே பெறாது என்று பேசிவிட்டு உங்க மோடி வாபஸ் வாங்கின பின் ஏண்டா பேசினோம்னு வாங்கி கட்டிகிட்டது போதாதா திரு அண்ணாமலை !???? 5 ஜி ஏலம் கம்மியாயிருக்கே அதுக்கு பொதுமக்கள் கிட்ட யார் மன்னிப்பு கேட்பது சொல்லுங்க அண்ணாமலை சார்,

இதையும் படியுங்கள்: 5 ஜி அலைக்கற்றையில் மிகப்பெரிய ஊழல்..!பாஜக அரசு விசாரணை நடத்தவில்லையென்றால்..! அடுத்த அரசு விசாரிக்கும்-ஆ.ராசா

#உலகரங்கில்_இந்தியா 
இந்திய மக்கள விலைவாசியை தினமும் உயர்த்தி தவிக்க விட்டுட்டு இந்தியா உலகரங்கில் உயர்ந்து நிக்கிறதா கதைவிடறதையே வேலையா வச்சியிருக்கீங்க. 8 வருசத்தில் நீங்க சொன்ன வாக்குறுதி எதாவது ஒன்னு செஞ்சி இருக்கிங்களா வருடத்திற்கு 2 கோடி இளைஞர்களுக்கு வேலை என்னாச்சி? உங்களுக்கு வெளிநாட்டை இந்தியாவுடன் சமன் படுத்தி பேச எந்த தகுதியும் இல்லை!

#பேசஅருகதைஇல்லை 

பொருளாதாரத்தில்  இந்தியாவை அதல பாதளத்தில் தள்ளி அமெரிக்கா டாலர் ₹80 ரூபாய்க்கு கொண்டு வந்து நிறுத்தி விட்டீர்கள், சிறு தொழில்களை முற்றிலுமாக அழித்து வருகிறீர்கள்,  அதானியின் வருமானம் 2014லில் ₹3000 கோடி தற்பொழுது 40000 கோடி.
மதிக்கெட்ட இந்த ஒன்றிய கார்பரேட் அரசு விலைவாசிகளை விண்ணை தாண்டி உயர்த்தி மக்களை தவிக்க விட்டிற்கும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு பாராளுமன்றத்தில் பேசும் அருகதை இல்லை பாஜக மக்களுக்கு துரோகம் செய்துள்ளது.ஆணவம் பிடித்த திருமதி நிர்மலா சீதாராமன் தொடர்ந்து நிதியமைச்சாராக இருந்தால் இந்தியா இலங்கையை விட ஒரு மோசமான நிலைக்கு போகும்.
 

click me!