நான் வாயை திறந்தால் தற்கொலை செய்து செத்துடுவீங்க... சிஏஏ-வுக்காக சீறிய மன்சூர் அலிகான்..!

By Thiraviaraj RMFirst Published Feb 17, 2020, 11:14 AM IST
Highlights

நாம் தமிழர் கட்சி சார்பில் போராட்டக்காரர்களுக்கு ஆதரவு தெரிவித்து வண்ணாரப்பேட்டையில் கூட்டம் நடந்தது. இதில் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். 

நாம் தமிழர் கட்சி சார்பில் போராட்டக்காரர்களுக்கு ஆதரவு தெரிவித்து வண்ணாரப்பேட்டையில் கூட்டம் நடந்தது. இதில் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். 

அப்போது மன்சூரலிகான் பேசும்போது, "நான் வாயை திறந்தாலே, எப்ஐஆர் போட்டுட்டு 10 பேர் வெளியே ரெடியா நிப்பாங்க. நான் இந்த மாதிரி பிஸ்கோத்துங்களுக்கு பயப்படுபவன் அல்ல. ஆனால், மக்களின் நியாயமான, தார்மீகமான, ஜனநாயக ரீதியாக இங்கே போராடிட்டு இருக்கீங்களே, நான் உள்ளே புகுந்து பிரச்சனை எதுவும் ஆயிடக்கூடாதுன்றதுக்காக அப்படியே பொத்திக்கிட்டு இருக்கேன். இங்கிலிஷ் தெரியாது இல்லாட்டி நான் வாயை தொறந்தேன்னு வெச்சுக்குங்க, ஒருத்தன் உயிரோடவே இருக்கவே முடியாது. அவனவன் நாண்டுக்கிட்டு செத்துப்போயிடுவான்.

சூசைட் பண்ணிட்டு செத்துப்போயிடுவான். என்னுடைய ஒரே கோரிக்கை என்னன்னா, இந்த சிட்டிசன்ஷிப், அமெண்ட்மென்ட் ஆக்ட், நேஷனல் சிட்டிசன்ஷிப்,  இன்னும் என்ன இருக்கோ. அவங்களுக்கு ஏபிசிடி-யே தெரியாது. ஆனா இருக்கிற ஏபிசிடி, உங்கப்பன் தாடின்னு எல்லா எழுத்துலயும் சட்டத்தை கொண்டு வருவான். என்சிஏ, என்ஆர்சி, என்ஆர்பி. இவங்களை விட்டால், இன்னும் 4 வருஷத்துக்கு இதைத்தான் பண்ணிட்டு இருப்பாங்க.  நீட் தேர்வு ஈவிஎம்-ல் மொள்ளமாரித்தனம் பண்ணித்தான் இவங்க ஆட்சிக்கு வந்திருக்காங்க.

 

அதனால இவங்களை ஒட்டுமொத்தமா துடைச்செறியறதுதான் என்னுடைய வேண்டுகோள். பத்திரிகையாளர்களுக்கும் நான் வேண்டிக்கிறேன், இந்தியா முழுக்க எல்லாம் வெளிப்பட்டுடுச்சு. கட்டுரைகளை ஏதாவது எழுதி இவங்க ஆட்சியை துடைத்தெறியணும். உதாரணத்துக்கு இந்த டிஎன்பிஎஸ்சி தேர்வு, நீட் தேர்வு இது ரெண்டுத்துலயும் ஆள்மாறாட்டம் பண்ணி ஆளை புடிச்சாங்களே, கைது பண்ணாங்களே. அப்பறம் நீ மட்டும் ஏன் ஆட்சியில உட்கார்ந்திருக்கே, கீழே இறங்கணுமா இல்லையா? கைதானவங்களுக்கு ஒரு சட்டம், உங்களுக்கு ஒரு சட்டமா? அம்மாக்கள் அந்த டெல்லியில ஷாகீன்பாக் போராட்டம் இருக்கே. ப்பா.. புல்லரிக்குதுங்க. அதை நான் பார்த்துட்டே இருக்கேன்.

 90 வயசுங்க, அசால்ட்டா பதில் சொல்றாங்க. படிக்கிறாங்க. கண்ணாடி போடாம படிக்கிறாங்க. அந்த நாணிமாக்கள், அம்மாக்கள் இன்னைக்கும் போராடிட்டு இருக்காங்க. அவங்களால கைது மட்டும்தான் பண்ண முடியும். இஷ்டத்துக்கு சட்டம் போடறதா? வாபஸ் வாங்கணும். இவங்களை யாரும் மன்னிக்க மாட்டாங்க. முஸ்லிம் சமுதாயம் மட்டுமல்ல. அனைத்து தாழ்த்தப்பட்ட சமுதாயமும் இவங்களை மன்னிக்காது. உபி.யில ஒருத்தர் இருக்காரு. அய்யோ, அய்யய்யோ அவர் பண்ற கூத்து. எங்கிருந்து புடிச்சிட்டு வந்தாங்க? ஒரு படிப்பறிவு இல்லை. ஒன்னுமே இல்லை. 25, 30 பேருக்கு மேல சுட்டுத்தள்ளியாச்சு.. சி.எம்-ன்ற பதவிக்கு ஒரு ஸ்டேட்டஸ் வேணாமா? இந்த பருப்பு வேகாது. இந்த சட்டத்தை உடனே வாபஸ் வாங்கணும்’’ என அவர் தெரிவித்தார்.

click me!