பொய் சொன்னால் முகத்தில் ஓங்கி அறைவேன்... முதல்வருக்கு எதிராக பிரபல நடிகர் ஆவேசம்..!

Published : Apr 28, 2021, 11:05 AM ISTUpdated : Apr 28, 2021, 11:27 AM IST
பொய் சொன்னால் முகத்தில் ஓங்கி அறைவேன்... முதல்வருக்கு எதிராக பிரபல நடிகர் ஆவேசம்..!

சுருக்கம்

மனிதராக இருந்தாலும், சாமியாராக இருந்தாலும் பொய் சொன்னால் அறை விழும் என உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு நடிகர் சித்தார்த் பதிலடி கொடுத்துள்ளார்.

மனிதராக இருந்தாலும், சாமியாராக இருந்தாலும் பொய் சொன்னால் அறை விழும் என உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு நடிகர் சித்தார்த் பதிலடி கொடுத்துள்ளார். கொரோனா தொற்றால்  உத்தரப்பிரதேச மாநிலம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. ஆக்சிஜன் தட்டுப்பாடு காரணமாக உத்தரப்பிரதேச மாநிலத்தில்  பலரும் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், உ.பி மாநிலத்தில் உள்ள மருத்துவமனைகளில் ஆக்ஸிஜன் தட்டுப்பாடு இருப்பதாக பொய் சொன்னால் சட்ட ரீதியிலான நடவடிக்கையை எதிர்கொள்ள வேண்டி இருக்கும் என முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளதை குறிப்பிட்டு நடிகர் சித்தார்த் ட்வீட் செய்துள்ளார். வழக்கமாக சினிமா பிரபலங்கள் சினிமாவில் வசனங்கள் பேசிவிட்டு செல்வது வழக்கமாக இருக்கும் இந்நிலையில், விதிவிலக்காக இருக்கிறார் நடிகர் சித்தார்த். “ஒழுக்கமான மனிதராக இருந்தாலும் அல்லது துறவியாக இருந்தாலும் அல்லது தலைவராக இருந்தாலும், யாராக இருந்தாலும் பொய் சொன்னால் முகத்தில் ஓங்கி ஒரு அறை விழும்!” என ட்வீட் செய்துள்ளார்.

 

உத்தரபிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் தங்கள் மாநிலத்தில் உள்ள மருத்துவமனைகளில் ஆக்ஸிஜன் தட்டுப்பாடு இருப்பதாக பொய் சொன்னால் சட்ட ரீதியிலான நடவடிக்கையை எதிர்கொள்ள வேண்டி இருக்கும் என சொல்லி இருந்தார். அவர் சொன்னதை ஆங்கில செய்தி நிறுவனம் செய்தியாக வெளியிட்டிருந்தது. அதனை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து நடிகர் சித்தார்த் இந்த கருத்தை தெரிவித்துள்ளார்.

PREV
click me!

Recommended Stories

Magalir Urimai Thogai: மகளிருக்கு ரூ.2,500.! புது ரூல்ஸ் வந்தாலும் இவங்களுக்கெல்லாம் கண்டிப்பா கிடைக்கும்.!
C.Vijayabaskar Join TVK: டெல்டாவே காலியாகிறது.! எடப்பாடிக்கு சவால்விட்ட விஜயபாஸ்கர்.! மாமல்லபுரத்தில் மாஸ் காட்டிய ஜெயலலிதா விசுவாசி.!