‘நினைத்தது ஒண்ணு நடந்தது ஒண்ணு’.... மத்திய அரசிடம் இருந்து தமிழக எம்.பி.க்கு வந்த திடீர் போன் கால்...!

By Kanimozhi PannerselvamFirst Published Apr 28, 2021, 10:49 AM IST
Highlights

அவருக்கு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்திடம் இருந்து நேரடியாக தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு விளக்கமளித்துள்ளார்.

இந்தியாவில் கொரோனா தொற்றின் 2வது அலை மிகவும் தீவிரமடைந்து வருகிறது. தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலும் ஆக்ஸிஜன், தடுப்பூசி ஆகியவற்றிற்கு தட்டுப்பாடு நிலவி வருகிறது. குறிப்பாக கொரோனா நோயாளிகளின் உயிர் காக்கும் ஆக்ஸிஜன் தட்டுப்பாட்டை போக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சரான ஹர்ஷவர்த்தன் அவர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தின் சாரம் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் கடந்த 23ம் தேதி கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். 

இதையடுத்து அவருக்கு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்திடம் இருந்து நேரடியாக தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு விளக்கமளித்துள்ளார். இதுகுறித்து சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளதாவது: மத்திய சுகாதாரத்துறை அமைச்சரின் அலுவலகத்தில் இருந்து தொலைபேசி அழைப்பு வந்தது. அமைச்சரின் கூடுதல் தனிச் செயலாளர் மதன் மோகன் தாஸ் பேசினார். 

“கடந்த 23 ஆம் தேதி நீங்கள் அமைச்சருக்கு எழுதிய கடிதம் குறித்து உரிய முடிவெடுத்து உங்களுக்குத் தெரிவிக்கிறோம்” என்றார்.  வழக்கமாக எழுதப்படும் கடிதத்துக்கு உரிய நடவடிக்கை எடுக்கிறோம் என்ற சம்பிரதாயமான பதிலோ, அல்லது விளக்கத்துடனான பதிலோ வரும். ஆனால் கடிதம் கண்டவுடன் முடிவெடுத்து உங்களுக்குச் சொல்கிறோம் என்று தொலைபேசியில் அழைத்து சொல்வது. இது வரை இல்லாத ஒன்றாக உள்ளது.

நல்லது நடந்தால் சரித்தான். நல்லதையே எதிர்பார்ப்போம். 23 ஆம் தேதி அமைச்சருக்கு நான் எழுதிய கடிதத்தில் வைத்துள்ள முக்கிய கோரிக்கைகள்;

* புதிய விலைக் கொள்கையை திரும்பப் பெற வேண்டும். தடுப்பூசிக்கு சந்தையைத் திறந்து விடுவது கூடாது. 

* தடுப்பூசி அளிப்பிற்காக, செங்கல்பட்டு இந்துஸ்தான் பயோ, நீலகிரி பாஸ்டியர் ஆய்வகம், சென்னையின் பி.சி.ஜி ஆய்வகம், சிம்லாவின் மத்திய மருந்து ஆராய்ச்சி மையம் போன்ற அரசு மருத்துவ நிறுவனங்கள் மூலம் உற்பத்தி அதிகரிக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.


* ஏற்றுமதி முறையாக நெறிப்படுத்தப்பட்டு உள்நாட்டுத் தேவை சற்றும் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். 


* "கட்டாய உரிமம்" வழங்கப்படுவதை உறுதி செய்து எல்லோருக்கும் தடுப்பூசி கிடைப்பதை உறுதி செய்தல் வேண்டும். 


* அமெரிக்க ஐக்கிய நாடுகள், மருத்துவ துணைப் பொருட்கள் மீது விதித்துள்ள தடையை நீக்க மத்திய அரசு முயற்சிக்க வேண்டும். 


* மத்திய அரசே தடுப்பூசிக்கான முழு செலவை ஏற்பதோடு எல்லோருக்கும் கட்டணமில்லா தடுப்பூசியை உறுதி செய்ய வேண்டும். 


"ஊரடங்கு" என்பது தீர்வுகளுக்கான கடைசி தெரிவாக இருக்க வேண்டுமென்று நமது பிரதமர் அறிவுறுத்தியுள்ளார். எனது வேண்டுகோள் இதுதான். தடுப்பூசி என்பது தீர்வுக்கான முதல் தெரிவு. அதற்கான கவனத்தை அரசாங்கம் செலுத்த வேண்டாமா? .மத்திய அரசு இதற்கான நேர்மறை நடவடிக்கைகளை மேற் கொள்ளுமா? காலத்தே செய்யுமா?. மத்திய அமைச்சர் ஹர்ஷ வர்த்தன் பதில் அளிப்பார் என்று நம்புகிறேன் என குறிப்பிட்டுள்ளார். 

click me!