பாஜக மீண்டும் ஆட்சி அமைத்தால் நாட்டில் சர்வாதிகார ஆட்சி தான் நடைபெறும் - அமைச்சர் சிவசங்கர் எச்சரிக்கை

By Velmurugan sFirst Published Mar 4, 2024, 11:43 AM IST
Highlights

மீண்டும் இந்தியாவில் பாஜக அமைத்தால் மாநிலங்கள் அனைத்திலும் மக்கள் பிரதிநிதிகள் இருக்க முடியாது, சர்வாதிகார ஆட்சி தான் நடைபெறும் என பள்ளிபாளையத்தில் நடைபெற்ற எல்லோருக்கும் எல்லாம் என்ற பொதுக்கூட்டத்தில் அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில் எல்லோருக்கும் எல்லாம் என்ற தலைப்பில் திமுக பொதுக்கூட்டம் நடைபெற்றது. நிகழ்ச்சியில் அமைச்சர் எஸ்.எஸ் சிவசகங்கர் பங்கேற்று பொதுக்கூட்டம் மேடையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் மத்தியில் பேசினார். அப்பொழுது, தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் பெண்களுக்கு என்று ஆயிரம் ரூபாய் உரிமைத்தொகை மற்றும் பெண்களுக்கு இலவச பேருந்து, கல்லூரி மாணவர்களுக்கு மாதம் ஆயிரம் என பல்வேறு வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். ஆனால் இவற்றிற்கெல்லாம் முட்டுக்கட்டையாக இருப்பது மோடியின் மத்திய அரசு, மாநில சுயாட்சிகளை சீரழிப்பது பாஜக அரசின் வேலையாக உள்ளது.

ஜம்மு காஷ்மீர் என ஒரு மாநிலம் நம் தமிழ்நாடு மாதிரி ஒரு மாநிலமாக இருந்தது. இன்றைக்கு அது மாநிலமாக இருக்கிறதா? யூனியன் பிரதேசமாக ரெண்டு யூனியன் பிரதேசமா மூன்று பகுதியாக உள்ளது யாரும் எதிர்த்து கேட்க முடியாது. யாருக்கும் பதவி கிடையாது,  என்று சொன்னதோடு அங்கு இருக்கின்ற முக்கிய தலைவர்கள் அனைவரும் வீட்டை விட்டு வெளியே வர முடியாத அளவிற்கு வீட்டு சிறை வைக்கப்பட்டுள்ளனர். 

பிரதமர் மோடி தமிழ்நாட்டிலையே குடியேறினாலும் பாஜகவிற்கு ஓட்டுக்கள் கிடைக்காது- விளாசும் கனிமொழி

தலைவர்களுக்கு தான் இந்த நிலை என்றால், அப்பகுதி மக்களுக்கும், முறையான இணையதள சேவை இல்லாததால் வெளியுலக மக்களை தொடர்பு கொள்ள முடியாத நிலை உள்ளது. ஊருக்கு ராணுவத்தை தாண்டி தான் போக முடியும் அப்படி ஒரு நிலை மாநிலத்தையே ஊரடங்கு உத்தரவு போட்டது போல ஒரு ராணுவ கஸ்டடியில் இன்றைக்கு ஜம்மு காஷ்மீர் இருக்கிறது. நாளைக்கு இதே நிலைமைதான் இந்தியாவில் இருக்கின்ற மற்ற மாநிலங்களுக்கும் வரும். நாளைக்கு வந்து நீ அசைவம் சாப்பிடாதன்னு சொன்னா சாப்பிடாம இருப்போமா? கட்டுப்படுவோமா? முடியாது நம்முடைய உணவு நம்ம பழக்கம். நாளைக்கு நம்முடைய மொழியை நீ பேசக்கூடாதுனு சொன்னா நம்மால் முடியுமா.

இலங்கையில் சாந்தன் உடல் இன்று அடக்கம்... கதறி அழும் தாய்- இறுதி சடங்கில் குவித்த தமிழர்கள்

தமிழ்நாட்டினுடைய பெருமையை காப்பதற்கும் தமிழ்நாட்டின் சுயமரியாதையை காப்பதற்கும் நாங்கள் தொடர்ந்து போராடுவோம். நம்முடைய முதல்வர் வழியில் நாம் போராட வேண்டும். அதற்கான உறுதி ஏற்கின்ற நாள்தான் இந்த பொதுக்கூட்டம் இந்த பொதுக்கூட்டத்தில் உறுதி எடுப்போம். 40 தொகுதியையும் நாம்தான் வெற்றி பெறுவோம். இந்தியாவின் பிரதமர்  யார் என்று நம்முடைய முதலமைச்சர் முடிவு செய்வார் என்றார்.

click me!