எச்சரிக்கை மணி அடித்த "கவர்னர் மாளிகை"..! ஆளுநர் நடவடிக்கையை எதிர்த்தால் 7 வருட சிறை...!

First Published Jun 24, 2018, 7:57 PM IST
Highlights
if anyone disturbing governor work they will be punished by 7 yesrs jail


எச்சரிக்கை மணி அடித்த ஆளுநர் மாளிகை..! ஆளுநர் நடவடிக்கையை எதிர்த்தால் 7 வருட சிறை...!

ஸ்டாலின் கேள்விக்கு அதிரடி விளக்கம் கொடுத்த ஆளுநர் மாளிகை....!

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தின் மாவட்டம் தோறும் பயணம் குறித்து விமர்சனம் செய்த திமுக செயல் தலைவர் ஸ்டாலினுக்கு  விளக்கம் அளித்துள்ளது ஆளுனர் மாளிகை....

மாநில அரசின் அதிகாரத்தில் ஆளுநர் ஈடுபடுவதாக கூறி, அதற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று கருப்பு கொடி ஏந்தி ஆளுநர் மளிகை நோக்கி  திமுகவினர் பேரணியாக சென்றனர்.

பேரணியாக சென்றவர்களை தடுத்து நிறுத்தினர் காவல் துறையினர்.

இந்நிலையில் இதற்கு பதில் அளித்துள்ள ஆளுநர் மாளிகை, தற்போது  செய்திக்குறிப்பை வெளியிட்டு உள்ளது.

அதில், ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தின் பயணம் தொடரும் என்றும்,  மாவட்டம் தோறும் சென்று, மக்களின் பிரச்சனையை கேட்டறிந்து வருகிறார் ஆளுநர்...

எந்த அதிகாரிகளுக்கும் ஆளுநர் இதுவரை உத்தரவு பிறப்பித்தது இல்லை...

ஆளுநர் பன்வாரிலால் புரோகித் மேற்கொண்டுள்ள பயணம் தொடரும்

மாநிலத்தின் அனைத்து பகுதிகளுக்கும் ஆளுநர் செல்ல அதிகாரம் உள்ளது.

7 ஆண்டு காலம் சிறை

ஆளுநரின் வேலையை செய்ய விடாமல் தடுப்பவர்களுக்கு 7 ஆண்டு காலம் சிறை தண்டனை வழங்கும் சட்டம் உள்ளது என்றும் அந்த  செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

தமிழகம் முழுவதும் உள்ள மாவட்டங்களுக்கு  நேரடியாக  சென்று  மக்களுக்கு என்ன  தேவை  உள்ளது என்பதை கேட்டறிந்து வருகிறார் ஆளுநர். 

இதற்கிடையில் வரும் 2019 ஆம் ஆண்டு வரஉள்ள தேர்தலை சந்திக்க, இப்போதே  பாஜக ஆயத்தமாகி வருகிறது என்றும், இதனை தடுக்கும் பொருட்டு திமுக செயல்படுவதாக பேசப்பட்டு வருகிறது.இதனை எதிர்க்கும் பொருட்டு பதிலடி கொடுத்துள்ள ஆளுநர் மாளிகை அலுவலகம் எச்சரிக்கை மணி அடித்துள்ளது.

ஆளுநரின் வேலையை செய்ய விடாமல் தடுப்பவர்களுக்கு 7 ஆண்டு காலம் சிறை தண்டனை வழங்கும் சட்டம் உள்ளது என்றும் ஆளுநர் அலுவலகம் வெளியிட்ட   செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது என்பது என்பது குறிப்பிடத்தக்கது.

click me!