இயக்குநர் கவுதமன் கைது! சாப்பிட்டுக் கொண்டிருந்தவரை போலீசார் இழுத்துச் சென்றனர்! கவுதமனின் மனைவி கண்ணீர்!

 
Published : Jun 24, 2018, 05:28 PM ISTUpdated : Sep 19, 2018, 02:34 AM IST
இயக்குநர் கவுதமன் கைது! சாப்பிட்டுக் கொண்டிருந்தவரை போலீசார் இழுத்துச் சென்றனர்! கவுதமனின் மனைவி கண்ணீர்!

சுருக்கம்

Director Gauthamman arrested

ஐ.பி.எல்., போட்டிக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டதாக இயக்குநர் கவுதமனை, சென்னை, சூளைமேட்டில் உள்ள அவரது வீட்டில், திருவல்லிக்கேணி போலீசார் கைது செய்தனர்.

காவிரி விவகாரம் தொடர்பாக தமிழகம் முழுதும் போராட்டம் நடத்தி வந்தநிலையில், சென்னையில் ஐபிஎல் போட்டிகளை நடத்த கடும் எதிர்ப்பு எழுந்தது.

காவிரி பிரச்சனையை மறக்கடிக்கவே ஐபிஎல் போட்டிகள் நடத்தப்படுவதாக அரசியல் கட்சிகளும், திரையுலகைச் சேர்ந்தவர்களும், பல்வேறு தமிழ் அமைப்புகளும் குற்றம் சாட்டினார். இதனைத் தொடரந்து ஐபிஎல் போட்டிகள் நடைபெறும் என்று நிர்வாகம் அறிவித்தது

ஐபிஎல் போட்டிக்கு எதிராக ஏப்ரல் 10 ஆம் தேதி சென்னையில் மிகப் பெரிய அளவில் போராட்டம் நடத்தப்பட்டது. இந்த போராட்டத்தில் தமிழ் அமைப்புகள் என பல்வேறு அமைப்புகள் கலந்து கொண்டன.

பல்லாயிரக்கணக்கானோர் திரண்டு சென்னை அண்ணா சாலையில் போராட்டம் நடத்தினர். தமிழ் திரையுலகத்தைச் சேர்ந்த பாரதிராஜா, சீமான், அமீர், கவுதமன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இந்த நிலையில், இயக்குநர் கவுதமனை இன்று திருவல்லிக்கேணி போலீசார் கைது செய்தனர். அவர் மீது 8 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து இயக்குநர் கவுதமனின் மனைவி மல்லிகா, தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்தபோது, சாப்பிட்டுக் கொண்டிருந்த எனது கணவரை போலீசார் தரதரவென இழுத்துச் சென்றனர். கைது தொடர்பாக போலீசார் தன்னிடம் எதுவும் கூறவில்லை என்றும் கவுதமனின் மனைவி மல்லிகா தெரிவித்திருந்தார். தமிழகத்தில் சமூக போராளிகள் தொடர்ந்து கைது செய்யப்பட்டு வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

PREV
click me!

Recommended Stories

திமுகவை வீழ்த்த நினைப்பவர்கள் காணாமல் போய்விடுவார்கள்..! முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கொக்கரிப்பு
திமுகவை நத்தி பிழைப்பதற்காக.. நாயும் பிழைக்கும் இந்த பிழைப்பு..! குருவுக்கு எதிராக அக்னியை கக்கும் நாஞ்சில்