சிலை கடத்தலில் இபிஎஸ்க்கு தொடர்பு? அந்த இரண்டு அமைச்சர்கள் யார்? கொளுத்தி போட்ட புகழேந்தியால் பரபரப்பு..!

Published : Nov 14, 2022, 07:25 AM ISTUpdated : Nov 14, 2022, 07:31 AM IST
சிலை கடத்தலில் இபிஎஸ்க்கு தொடர்பு? அந்த இரண்டு அமைச்சர்கள் யார்? கொளுத்தி போட்ட புகழேந்தியால் பரபரப்பு..!

சுருக்கம்

கொள்கை பரப்பு செயலாளராக நியமிக்கப்பட்டதை அடுத்து முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா நினைவிடத்தில் ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர் புகழேந்தி மலர்தூவி மரியாதை செலுத்தினார். 

சிலை கடத்தல் வழக்கில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு தொடர்பு உள்ளதா  என்பதை பொன். மாணிக்கவேல் தெளிவுப்படுத்த வேண்டும் என புகழேந்தி கூறியுள்ளார்.

கொள்கை பரப்பு செயலாளராக நியமிக்கப்பட்டதை அடுத்து முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா நினைவிடத்தில் ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர் புகழேந்தி மலர்தூவி மரியாதை செலுத்தினார். இதனையடுத்து, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர்;- ஓபிஎஸ் என்னை கொள்கை பரப்பு செயலாளராக நியமிக்கப்பட்டதை அடுத்து அம்மா நினைவிடத்தில் மரியாதை செலுத்தினேன் என்றார். 

இதையும் படிங்க;- எம்.ஜி.ஆர், ஜெயலலிதா செய்தார்கள்.. எடப்பாடி செய்யவில்லை.! அதிமுக வரலாற்றை சொன்ன பண்ருட்டி ராமச்சந்திரன்

பொன். மாணிக்கவேல் மிகச்சிறந்த நேர்மையான அதிகாரி என்பதால் காவல்துறையினர் பலருக்கு அவரை பிடிப்பதில்லை. இவர் சிலை கடத்தல் அதிகாரியாக நியமிக்கப்பட்டதை அடுத்து தான் பல்வேறு சிலைகள் மீட்கப்பட்டு பல உண்மைகளும் வெளிவந்தன. சிலை கடத்தலில் 2 அமைச்சர்கள் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள் என்று கூறியதை அடுத்துதான் அப்போது உள்துறையை கையில் வைத்தததிருந்த எடப்பாடி பழனிசாமி பொன். மாணிக்கவேலை மாற்ற முயன்றார். ஆனால், பொன் மாணிக்கவேல் நீதிமன்றத்தை நாடினார். 

இதையும் படிங்க;- சில வெட்டுக்கிளிகள், வேடந்தாங்கல் பறவைகள் சென்றாலும் அதிமுகவை யாராலும் வீழ்த்த முடியாது -செங்கோட்டையன் ஆவேசம்

இந்த சிலை கடத்தல் வழக்கில் சம்மந்தப்பட்ட அந்த 2 அமைச்சர்கள் யார் என்பதை பொன். மாணிக்கவேல் வெளியிட வேண்டும். அந்த 2 அமைச்சர்களில் இபிஎஸ் இருக்கிறாரா? அவருக்கு அதில் என்ன பங்கு என்பதை தெளிப்படுத்த வேண்டும். உண்மையை மக்களுக்கு சொல்ல வேண்டும் என புகழேந்தி கூறியுள்ளது பெரும் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே எடப்பாடி பழனிசாமி மீது கொடநாடு வழக்கு, நெடுஞ்சாலை துறையில் முறைகேடு வழக்குகள் நிலுவையில் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது. 

இதையும் படிங்க;- ஏழு பேர் விடுதலைக்காக துரும்பை கூட கிள்ளிப் போடாதா திமுக.. ஸ்டாலினை போட்டு தாக்கும் ஜெயகுமார்..!

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

எந்த நீதிமன்றம் சென்றாலும் ராமதாஸ் வெற்றி பெற முடியாது..! கே.பாலு சவால்!
இந்த ஸ்டாலினிடம் உங்கள் பாச்சா பலிக்காது..! தூங்கா நகரில் பாஜகவுக்கு சவால் விட்ட முதல்வர்!