சிக்கியது "ஜெ" கையெழுத்திட்ட கடிதம்..! மீண்டும் வெடித்தது சர்ச்சை...!

First Published Oct 19, 2017, 5:14 PM IST
Highlights
identified the letter with the signature of jayalalitha


மீண்டும்  புது பரபரப்பு

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 23-ம் தேதியிட்டு அப்போதைய பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவுக்கு கடிதம் எழுதியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. செப்டம்பர் 22-ம் தேதி அப்போலோ மருத்துவமனையில் உடல்நலக்குறைவால் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்ட நிலையில், அதற்கு மறுநாள், அவர் மருத்துவமனையில் இருந்து, ஆளுநருக்கு 'பெஸ்ட் விஷஸ்' என்று ஜெயலலிதா தன் கைப்பட எழுதியிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்மூலம் ஜெயலலிதா, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மறுநாள் சுயநினைவுடன் இருந்தார் என்று தெரியவந்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. என்றாலும் ஜெயலலிதா, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது சுயநினைவின்றி இருந்ததாக ஏற்கெனவே அப்போலோ மருத்துவமனை அண்மையில் வெளியிட்ட தகவலில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

தற்போது, பொறுப்பு ஆளுநருக்கு மறுநாள் ஜெயலலிதா எழுதிய கடிதத்தில் அவரே கையெழுத்திட்டிருப்பதாக வெளியாகியுள்ள தகவல் முரணாக உள்ளது. இதில் எது உண்மை என்பது தெரியவரவில்லை.

ஜெயலலிதா மரணம் குறித்த சர்ச்சை தொடரும் இவ்வேளையில், தமிழக அரசு ஜெ. மரணம் தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை கமிஷன் அமைத்துள்ள நிலையில், இதுபோன்றதொரு கடிதம் வெளியாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்த  கடித்தால்  தமிழகத்தில்  மேலும் பெரும் பரபரப்பு  நிலவி  வருகிறது 

click me!