
ஆட்சியைக் கலைப்பதிலேயே டிடிவி தினகரன் குறியாக இருப்பதாக ஜெ.தீபா திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசியபோது தெரிவித்தார்.
செய்தியாளர்களிடம் பேசிய ஜெ.தீபா, “ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிட்டு, 'ஜெயலலிதா' இருந்த இடத்தில் இருந்து வெற்றி பெறுவேன் என்று நம்பிக்கை தெரிவித்தார்.
மேலும், டெங்கு விஷயத்தில் மாநில சுகாதாரத்துறை செயலற்ற தன்மையில் உள்ளது என்று குற்றம் சாட்டினார்.
இரட்டை இலை விஷயத்தில் எங்களது மனுவும் பரிசீலனையில் உள்ளது. தொண்டர்கள் யாரை முடிவு செய்கிறார்களோ அவர்களுக்குத் தான் இரட்டை இலை கிடைக்க வேண்டும்.
ஈ.பி.எஸ்., ஓ.பி.எஸ் இருவருமே மத்திய அரசு மற்றும் அவர்கள் கட்சியில் உள்ள சில வலிமையான சக்திகளின் கட்டாயத்தின் பேரில்தான் இணைந்துள்ளார்கள். அவர்களாக இணையவில்லை என்று கூறினார்.
எடப்பாடி அணியில் இணைந்து கொண்டு அரசியல் பணியாற்றுவேன் என நான் சொன்னதில்லை. அதே சமயம் தொண்டர்களும், மக்களும் என்ன விரும்புகிறார்களோ அதன்படி செயல்படுவேன் என்று உறுதிபடக் கூறிய ஜெ.தீபா, தினகரன் மக்களைப் பற்றி கவலைப்படாமல் ஆட்சியைக் கலைக்க வேண்டும் என்ற நோக்கிலேயே செயல்படுகிறார் என்று குற்றம் சாட்டினார்.