டெங்கு சிகிச்சையில் முதல்வர் காப்பீடு திட்டத்தில் பலன் பெறலாம்!

 
Published : Oct 19, 2017, 05:13 PM ISTUpdated : Sep 19, 2018, 01:19 AM IST
டெங்கு சிகிச்சையில் முதல்வர் காப்பீடு திட்டத்தில் பலன் பெறலாம்!

சுருக்கம்

chief ministers insurance scheme covered dengue treatment

டெங்கு நோய் இப்போது பரவலாக பிரச்னையை ஏற்படுத்தி வருகிறது. இதற்காக சோதனை என்ற வகையிலேயே பலரும் அதிக அளவு பணத்தை தனியார் மருத்துவமனைகளில் செலவழிக்கின்றனர். அரசு என்னதான் கட்டுப்பாடுகள் விதித்தாலும், நடவடிக்கை எடுப்போம் என கூறினாலும், தனியார் மருத்துவமனைகள் அதைப் பற்றியெல்லாம் கண்டுகொள்வதில்லை.

இந்நிலையில், டெங்கு ரத்தக் கசிவு நோய், டெங்கு ஷாக் சிண்ட்ரோம் மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்படும் சூழல் வந்தால், அதற்கான செலவு   முதல்வர் காப்பீட்டுத் திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளது என்றும், இதை தனியார் மருத்துவமனைகள் மறுக்கக் கூடாது  என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

தனியார் மருத்துவமனைகள் ஏதேனும் இதனை மறுக்கும் பட்சத்தில்
044-2435 0496 / 2433- 4811  என்ற தொலைபேசி எண்களிலும்
94443 40496 / 9361482899 என்ற மொபைல் எண்களிலும் தொடர்பு கொள்ளலாம் என்று  சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறியுள்ளனர். 

PREV
click me!

Recommended Stories

பாரதி..! சாதிவெறி ஐயா ஈவேரா..! அதிர வைக்கும் நாம் தமிழர் கருத்தரங்கம் போஸ்டர்
கரூரில் விஜய் கட்சியில் கூட்டமாக சேர்ந்த இஸ்லாமியர்கள்..! செந்தில் பாலாஜிக்கு டப் கொடுக்கும் மதியழகன்