
நான் 16 வயது இளைஞன் இல்லை 61 வயது இளைஞன் என மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
திமுக தலைவர் கருணாநிதியின் வைரவிழா கடந்த வெள்ளிகிழமை நடைபெற்றது. இதில், பல்வேறு மாநில முதலமைச்சர்கள் மற்றும் முன்னாள் முதலமைச்சர்கள் கலந்து கொண்டு பேசினர்.
அப்போது மத்தியில் ஆளும் பாஜக அரசை கடுமையாக விமர்சித்தனர். இதுகுறித்து மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் கருத்து தெரிவிக்கையில், இது வைரவிழா அல்ல வயதானவர்களுக்கான விழா’ என விமர்சித்தார்.
இதையடுத்து அதற்கு பதிலடியாக பேசிய ஸ்டாலின் பொன். ராதாகிருஷ்ணன் அவர்களுக்கு தற்போது 16வயதுதான் ஆகிறாதா என கேள்வி எழுப்பினர்.
இந்நிலையில் நெல்லையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த பொன். ராதாகிருஷ்ணன் ‘நான் 16 வயது இளைஞன் இல்லை 61 வயது இளைஞன் எனவும் வயதை மறைக்க நினைத்திருந்தால் நரை முடிகளுக்கு டை அடித்திருப்பேன்’ எனவும் தெரிவித்தார்.
மேலும் காவிரி உரிமையை இழந்ததற்கு 200% திமுக தான் காரணம் என குற்றம்சாட்டினார்.