யூனிபார்மை கழட்டிடுவேன்.. போலீஸ்காரர்களை கதறவைத்த பெண் வழக்கறிஞர்.. 6 பிரிவுகள் கீழ் வழக்குப் பதிவு..

By Ezhilarasan BabuFirst Published Jun 7, 2021, 9:41 AM IST
Highlights

மேலும் காரை ஓட்டி வந்த பெண் முககவசம் அணியாமல் வந்தமைக்காக ரூ.500 அபராதம் விதித்து ரசீதை மேற்படி பெண்ணிடம் கொடுத்துள்ளனர். உடனே மேற்படி பெண் தனது தாய்க்கு செல்போன் மூலம் தகவல் கொடுத்து சம்பவயிடத்திற்கு வர கூறியுள்ளார்.

சேத்துப்பட்டுபகுதியில் ஊரடங்கு வாகன சோதனையில் போக்குவரத்து காவலர்களை பணி செய்ய விடாமல் தடுத்து தகராறில் ஈடுபட்டு மிரட்டிய பெண் வழக்கறிஞர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக தமிழக அரசு ஆணைப்படி ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்து வருகிறது. அரசு வழிகாட்டுதல்களை மீறி வெளியே வருபவர்களின் வாகனங்களை சோதனை செய்து உரிய அனுமதி இல்லாமல் செல்பவர்கள் மீது சட்டபடி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்காக 560 இடங்களில் வாகன தணிக்கை சாவடிகள் அமைக்கப்பட்டு காவல் அதிகாரிகள் கொண்ட குழுவினர்கள் தணிக்கை செய்து வருகின்றனர். நேற்று (6.6.2021) காலை 7.45 மணியளவில் சேத்துப்பட்டு சிக்னல் சந்திப்பில் காவலர்கள் வாகன தணிக்கை செய்து கொண்டிருக்கும் பொழுது, காரில் உரிய அனுமதியின்றி பெண் ஒருவர் முகக் கவசம் அணியாமல் கார் ஒட்டிவந்தார், காவல்துறையினர் அவரை நிறுத்தி விசாரணை செய்தனர். 

மேலும் காரை ஓட்டி வந்த பெண் முககவசம் அணியாமல் வந்தமைக்காக ரூ.500 அபராதம் விதித்து ரசீதை மேற்படி பெண்ணிடம் கொடுத்துள்ளனர். உடனே மேற்படி பெண் தனது தாய்க்கு செல்போன் மூலம் தகவல் கொடுத்து சம்பவயிடத்திற்கு வர கூறியுள்ளார். சம்பவயிடத்திற்கு வந்த பெண், போலிசார் வழங்கிய ரசீதை வாங்கி கீழே ஏறிந்து விட்டு, தான் ஒரு பெண் வழக்கறிஞர் என்று உரக்க சப்தமிட்டு, காவலர்களை மரியாதைக் குறைவாக பேசினார், மேலும் காவல்துறையினரை பணி செய்யவிடாமல் தடுத்து மிரட்டினார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் பரவி பரபரப்பை எற்படுத்தியது. இந்நிலையில் மிரட்டிய பெண் வழக்குறைஞர் தனுஜா கத்துலா, க/பெ.பழனிவேல் ராஜன், கீழ்பாக்கத்தை சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது. இது குறித்து சம்மந்தப்பட்ட போக்குவரத்து காவலர், சேத்துப்பட்டு காவல் ஆய்வாளரிடம் கொடுத்த புகாரின் பேரில் மேற்படி தனுஜா கத்துலா மீது 269, 270, 290, 353, 294 (b) 506 (i) இந்திய தண்டனை சட்டப்பிரிவுகள் படி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது. 

தமிழக அரசின் வழிகாட்டுதலின் படி முன்கள பணியில் இருந்து வரும் அனைத்து அரசு துறையினரும் ஒருங்கிணைந்து செயல்பட்டு பொதுமக்கள் ஒத்துழைப்புடன் கொரோனா நோய் தொற்று குறைக்கப்பட்டுள்ளது, காவல் துறையின் நடவடிக்கைகளில் பொதுமக்களிடம் கனிவுடனும், மனித நேயத்துடனும் நடந்து கொள்ள வேண்டும் என காவல்ஆணையர் உத்தரவு பிறபித்துள்ளார். காவல் துறையினர் 24 மணி நேரமும் 3 பிரிவுகளாக தொடர்ச்சியாக அர்ப்பணிப்புடன் பணி செய்து வருகின்றனர். மேற்கண்ட வாகன தணிக்கையில் நடைபெற்ற சம்பவம் விரும்பதகாத வகையில் நடைபெற்று உள்ளது. எனவே பொதுமக்கள் அரசாங்கத்தினுடைய வழிகாட்டுதல்களை முழுமையாக கடைபிடித்து காவல்துறையினருக்கு ஊரடங்கை அமல்படுத்துவதற்க்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்பதை அனைவரின் எதிர்பார்ப்பு.  

 

click me!