தடுப்பூசி செலுத்தும் பணி நிறுத்திவைப்பு.. போதிய தடுப்பூசி இல்லாததால் திண்டாடும் தமிழக அரசு..

By Ezhilarasan BabuFirst Published Jun 7, 2021, 9:19 AM IST
Highlights

தமிழக அரசின் கையிருப்பில் போதுமான  தடுப்பூசி இல்லாததால் பல இடங்களில் தடுப்பூசி செலுத்தும் பணி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் கையிருப்பில் போதுமான தடுப்பூசி இல்லாததால் கொரொனா தடுப்பூசி தட்டுப்பாடு நிலவி வருகிறது. 

தமிழக அரசின் கையிருப்பில் போதுமான  தடுப்பூசி இல்லாததால் பல இடங்களில் தடுப்பூசி செலுத்தும் பணி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் கையிருப்பில் போதுமான தடுப்பூசி இல்லாததால் கொரொனா தடுப்பூசி தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதன் காரணமாக நேற்று முதலே பல்வேறு இடங்களில் தடுப்பூசியனது நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில், இன்றும் சென்னையில் பல தடுப்பூசி மையங்களில் தடுப்பூசி இல்லை என்ற பெயர் பலகை வைக்கப்பட்டுள்ளது. 

மத்திய அரசிடமிருந்து போதுமான தடுப்பூசிகள் தமிழகத்திற்கு வராததே இதற்கு காரணமாக பார்க்கப்படுகிறது. குறிப்பாக தமிழகத்திற்கு மொத்தமாக ஒரு கோடியே ஒரு லட்சத்து 50 ஆயிரம் தடுப்பூசிகள் வந்திருக்கும் நிலையில் 97 ஆயிரத்து தடுப்பூசிகள் தற்போது வரையிலும் செலுத்தப்படுகிறது. தமிழக அரசின் கையிருப்பில் போதுமான தடுப்பூசி இல்லாததால் மத்திய அரசிடமிருந்து தடுப்பூசிகள் வந்தால் மட்டுமே தடுப்பூசி செலுத்த முடியும் என்று ஏற்கனவே தமிழக அரசு அறிவித்துள்ளது. 

இந்நிலையில் இன்று பல இடங்களில் தடுப்பு ஊசிகள் செலுத்தும் பணி நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. தேவை அதிகமாக இருக்கும் இடங்களில் மட்டுமே தற்போது குறைந்த அளவிலான தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகிறது. மேலும், தடுப்பூசி செலுத்த வரும் பொதுமக்கள் தடுப்பூசி இல்லை பெயர்ப்பலகை பார்த்து பிறகு வீடுகளுக்கு திரும்பினார்.
 

click me!