அதிமுக ஒற்றை தலைமை விவகாரம் தொடர்பாக ஓபிஎஸ், இபிஎஸ் இடையே உச்சக்கட்ட மோதலலை அடுத்து இருவரும் தனித்தனி அணியாக செயல்பட்டு வருகின்றனர். இருவரும் தனித்தனியாக நிர்வாகிகளை நீக்குவதும், நியமிப்பதுமாக இருந்து வருகின்றனர்.
ஒருங்கிணைப்பாளர் பதவியில் இருந்து பொதுக்குழுவால் தன்னை பதவி நீக்கம் செய்ய முடியாது என எடப்பாடி பழனிசாமி அனுப்பிய வழக்கறிஞர் நோட்டீசுக்கு ஓ.பன்னீர்செல்வம் காட்டமாக பதிலளித்துள்ளார்.
அதிமுக ஒற்றை தலைமை விவகாரம் தொடர்பாக ஓபிஎஸ், இபிஎஸ் இடையே உச்சக்கட்ட மோதலலை அடுத்து இருவரும் தனித்தனி அணியாக செயல்பட்டு வருகின்றனர். இருவரும் தனித்தனியாக நிர்வாகிகளை நீக்குவதும், நியமிப்பதுமாக இருந்து வருகின்றனர். அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கும் உச்சநீதிமன்றதத்தில் நிலுவையில் இருந்து வருகிறது.
இதையும் படிங்க;- எனக்கு 32 பல்லு இருக்கு.. அமைச்சர் எ.வ. வேலுக்கு பல்லு இருக்கான்னு தெரியல.. பங்கமாய் கலாய்க்கும் ஜெயக்குமார்.!
இந்நிலையில், ஓபிஎஸ் அதிமுக தலைமைக் கழக நிர்வாகிகள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை கடந்த 21ம் தேதி சென்னை வேப்பேரி தனியார் திருமண மண்டபத்தில் பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது. அப்போது, எடப்பாடி பழனிசாமி மீது கடும் வார்த்தைகளாலும், ஒருமையிலும் ஓபிஎஸ் தாக்குதல் தொடுத்தார். மேலும், எம்ஜிஆரை தெரியுமா? பார்த்தது உண்டா என்று கேள்வி எழுப்பினார்.
இந்நிலையில், அதிமுக கட்சி கொடி, பெயர் மற்றும் ஒருங்கிணைப்பாளர் பதவி ஆகியவற்றை பயன்படுத்தியதற்கு விளக்கம் கேட்டு கடந்த டிசம்பர் 22ம் தேதி ஓபிஎஸ்க்கு அதிமுக தலைமை நோட்டீஸ் அனுப்பி இருந்தது. இந்த நோட்டீஸூக்கு ஓபிஎஸ் தனது வழக்கறிஞர் பதில் அளித்துள்ளார். அதில், ஒருங்கிணைப்பாளர் பதவியில் இருந்து பொதுக்குழுவால் தன்னை பதவி நீக்கம் செய்ய முடியாது. அடிப்படை உறுப்பினர்களால் மட்டுமே அது முடியும்.
கட்சி அலுவலக சாவி ஒருவரிடம் இருப்பதால் மட்டுமே கட்சிக்கு சொந்தம் கொண்டாட முடியாது. ஏற்கனவே உச்சநீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கும் போது இதுபோன்று தேவையற்ற குற்றச்சாட்டுகளை எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து கூறி வந்தால் அவதூறு வழக்கு தொடர்வேன் என்றும் தெரிவித்துள்ளார். அதிமுக தொடங்கப்பட்ட நோக்கத்திற்கு எததிராக இபிஎஸ் செயல்படுகிறார். மேலும், கட்சி வழக்கு தொடர்பாக தனி நீதிபதி தெரிவித்த கருத்துக்கள், பிரதான வழக்கின் விசாரணைக்கு பொருந்தாது. ஆகையால் கட்சி கொடி, பெயர் பயன்படுத்துவது தவறு இல்லை என்றும் அதை யாராலும் தடுக்க முடியாது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க;- காலியாகும் டிடிவி.தினகரன் கூடாராம்.. முக்கிய மாவட்ட செயலாளர்களை தட்டித்தூக்கிய சி.வி.சண்முகம்..!