நடுரோடு என்று கூட பார்க்காமல் தரையில் படுத்து அமைச்சர் நாசர் செய்த காரியம்.. இணையத்தை தெறிக்கவிடும் போட்டோ.!

By vinoth kumar  |  First Published Dec 27, 2022, 6:45 AM IST

திருவள்ளூர் மாவட்டம் ஆவடி மாநகராட்சி குடிநீர் தேவை பூர்த்தி செய்ய பல்வேறு இடங்களில் இருந்து சேகரிக்கப்படும் நீரானது திருமுல்லைவாயில் நாகம்மை நகரிலுள்ள 15 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில்  தண்ணீர் சேகரிக்கப்பட்டு ராட்சத குழாய் மூலம் குடியிருப்புகளுக்கு அனுப்பப்பட்டு வருகிறது.


ஆவடி அடுத்த திருமுல்லைவாயிலில் மெட்ரோ குடிநீர் இணைப்பில் ஏற்பட்ட உடைப்பை தரையில் படுத்து பால்வளத்துறை அமைச்சர் நாசர் ஆய்வு செய்த புகைப்படம் வைரலாகி வருகிறது. 

கடந்த சட்டப்பேரவையில் ஆவடி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று பால்வளத்துறை அமைச்சராக சா.மு.நாசர் உள்ளார். இந்நிலையில், திருவள்ளூர் மாவட்டம் ஆவடி மாநகராட்சி குடிநீர் தேவை பூர்த்தி செய்ய பல்வேறு இடங்களில் இருந்து சேகரிக்கப்படும் நீரானது திருமுல்லைவாயில் நாகம்மை நகரிலுள்ள 15 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில்  தண்ணீர் சேகரிக்கப்பட்டு ராட்சத குழாய் மூலம் குடியிருப்புகளுக்கு அனுப்பப்பட்டு வருகிறது.

Latest Videos

undefined

இதையும் படிங்க;- தும்மினால் கூட குறை கண்டுபிடிக்கிறார்கள்.! திருமணத்திற்கு தேதி கொடுத்து விட்டு பயந்தேன்..! - மு க ஸ்டாலின்

மாண்டஸ் புயல் காரணமாக ஏற்பட்ட உயர் அழுத்தம் காரணமாக ராட்சத குழாயில் வால்வின் உள்பகுதியில் உடைப்பு ஏற்பட்டு சுமார் 2 லட்சம் குடிநீர் தண்ணீர் சாலையில் வழிந்தோடி வீணானது. இந்த விஷயம் அமைச்சர் நாசர் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இதையடுத்து பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் ராட்சத குழாயில் ஏற்பட்ட உடைப்பை நேரில் சென்று ஆய்வு செய்தார். 

அப்போது, சாலையில் தரையோடு தரையாக படுத்து வால்வு உடைந்த பகுதியை பார்வையிட்டார். உடனே குடிநீர் வீணாவதைத் தடுக்க உடனடியாக ராட்சத வால்வை மாற்றுவதற்கான ஏற்பாடுகளைச் செய்ய ஆவடி மாநகராட்சி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அதற்கான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த ஆய்வின் போது அமைச்சர் நாசர் செய்த தான் தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க;-  பாலுக்கு ஜிஎஸ்டி விலக்கு இருப்பது கூட தெரியாதவர் திமுக ஆட்சியின் பால்வளத்துறை அமைச்சர்... அண்ணாமலை சாடல்!!

click me!