கருணாநிதியை எதிர்த்து என்னை நரசிம்மராவ் தான் வலுகட்டாயமாக தேர்தலில் போட்டியிட வைத்தார்.
விசிக சார்பில் வழங்கப்படும் ‘காமராசர் கதிர் விருது’ இந்த ஆண்டு தனக்கு வழங்கப்பட்டதை பெருமையாகப் பேசிவருகிறார், மூத்த காங்கிரஸ்காரர் நெல்லை கண்ணன்.
“இத்தனை ஆண்டும் என்னைப் பயன்படுத்திக்கொண்ட தலைவர்கள் எல்லாம் என்னை மதிக்க வேண்டும் என்ற எண்ணமே இல்லாமல் அவமதித்தனர். என்னை மனிதனாக மதித்து, எனக்கு மரியாதை செய்யும் தம்பி திருமா மடியில் மரணம் நிகழ்ந்தாலும் மகிழ்ச்சி அடைவேன். ஒருமுறை ஜெயலலிதா எனக்கு பாரதி விருது அறிவித்தபோது, அதை சசிகலா அவரது சாதிக்கார பேராசிரியருக்கு கொடுக்கச் செய்துவிட்டார். இனி, இறுதி மூச்சுவரை திருமாவே என் பாதுகாவலன்.
40 ஆண்டுகளுக்கு முன்பே என்னை கருணாநிதி அழைத்தார். அப்போது எனது புத்திக்கு அது உரைக்கவில்லை. திருமாவும், ஸ்டாலினும் தங்கள் உடல்நலத்தை பார்த்துக்கொள்ள வேண்டும். கருணாநிதியை எதிர்த்து என்னை நரசிம்மராவ் தான் வலுகட்டாயமாக தேர்தலில் போட்டியிட வைத்தார். காங்கிரஸ் கட்சிக்காக ஒரு ஒலி நாடாவே வெளியிட்ட நான் இன்று அரசியல் அநாதையாகிவிட்டேன்’’ என அவர் கூறினார்.
நெல்லை கண்ணன்
தமிழ் ஆளுமைனு நெனச்சிட்டு இருந்தேன்,
இடத்துக்கு தகுந்த மாதிரி
ஊளை கும்புடு போடுற
சரியான சில்லறை கிராக்கி..
இந்தாள ஜெயில்ல போட்டது
தப்பே இல்ல,ச்சேய்..
நக்கி பிழைக்கும் நாய்கள்👇💦 pic.twitter.com/XY0B1pT67j
நெல்லை கண்ணன் ஒரு காலத்தில் திமுகவையும், கருணாநிதியையும் கடுமையாக சாடிப் பேசி அரசியல் செய்தவர் என்பது இங்கு திரும்பி பார்க்கத்தக்கது. திமுகவினர் பலரும் இதை சமூக வலைத்தளங்களில் சுட்டிக் காட்ட தவறவில்லை.
ஒருத்தர் கிட்ட நெல்லை கண்ணன் ஸ்டாலினிடம் கெஞ்சும் வீடியோ கேட்டேன். நாயும் பிழைக்குமா இந்த பிழைப்புனு சொல்லிட்டு போறாரு 😒? pic.twitter.com/isP8IlRBIw
— Dan vinoth 🔥சத்ரியன்🔥 (@DanVinoth)மேடை போட்டு எவனோ உனக்கு யுனெஸ்கோ விருது போல ஒரு டுபாக்கூர் விருதை கொடுக்கிறான் என்பதற்க்காக இப்படியா 🤦🏻♂️🤦🏼♂️🤦🏻♂️
ஊருக்கு உபதேசிக்கிற உனக்கு குறைந்தபட்ச தன்மானமாவது வேணாமாயா.. 🤦🏻♂️🤦🏻♂️🤦🏻♂️
மேடையிலே கை ஏந்துறீயே🤦🏻♂️🤦🏻♂️🤦🏻♂️
தமிழ் அறிஞனா நீ
சிலருக்கு பணம் இருந்தாலும் , சினிமா போல போதை - அதிகாரம், அங்கீகாரம் இல்லாமல் இருக்க முடியாது. எடுத்துக்காட்டு நெல்லை கண்ணன், வைகோ போன்றோர். இதற்கு மருந்தே கிடையாது.
— #A Proud Indian Hindu🇮🇳 #Bahubali (@anexcommie)