Omicron update | ஒமைக்ரான் வைரஸை ஓட, ஓட விரட்டியடிக்கும் முதலமைச்சர் ஸ்டாலின்! அமைச்சர் சேகர்பாபு பெருமிதம்.!

Published : Dec 27, 2021, 11:59 AM IST
Omicron update | ஒமைக்ரான் வைரஸை ஓட, ஓட விரட்டியடிக்கும் முதலமைச்சர் ஸ்டாலின்! அமைச்சர் சேகர்பாபு பெருமிதம்.!

சுருக்கம்

விஷக் கிருமிகள் மட்டுமல்லாது, விசமத்தனமான கருத்துகளை பரப்பு அரசியல் கட்சி தலைவர்களிடம் இருந்தும் தமிழ்நாட்டை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காப்பாற்றுவார் என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.

விஷக் கிருமிகள் மட்டுமல்லாது, விசமத்தனமான கருத்துகளை பரப்பு அரசியல் கட்சி தலைவர்களிடம் இருந்தும் தமிழ்நாட்டை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காப்பாற்றுவார் என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.

உருமாறிய கொரோனா தொற்றான ஒமைக்ரான் வைரஸ் பரவல் இந்தியாவில் நாளுக்கு நாள் ஜெட் வேகத்தில் அதிகரித்து வருகிறது. தமிழ்நாட்டிலும் ஒமைக்ரான் பரவல் வேகமெடுத்துள்ளது. நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 100-க்கும் மேற்பட்டோர் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. நாட்டிலேயே அதிகபட்சமாக டெல்லியில் 142, மகாராஷ்டிராவில் 141 கேரளாவில் 57, குஜராத் 49, ராஜஸ்தான் 43, தெலங்கானா 41, தமிழ்நாடு 34, கர்நாடாக்வில் 31 பேர் 578 பேர் ஒமைக்ரான் வகை கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஒமைக்ரான் தொற்று பரவலை தடுக்க நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் பங்களிப்பை வழங்க வேண்டும், கூட்டு முயற்சியே ஒமைக்ரான் வைரஸ் பரவலை தோற்கடிக்கும் என பிரதமர் மோடி கூறியுள்ளார். தொற்று பரவல் பட்டியலில் 7வது இடத்தில் உள்ள தமிழ்நாட்டில் நூற்றுக்கும் மேற்பட்ட மாதிரிகளின் முடிவுகள் அறிவிக்கப்படவில்லை. இதனால் தொற்று எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் அபாயம் உள்ளது. ஒமைக்ரான் தொற்று பரவலை தடுப்பது குறித்து ஆலோசனைகளை வழங்குவதற்கு மத்திய அரசின் குழுவும் தமிழ்நாட்டிற்கு வருகை தந்துள்ளது.

இந்தநிலையில் தமிழ்நாட்டில் ஒமைக்ரான் வைரஸை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஓட, ஓட விரட்டுவார் என்று இந்துசமய அறநிலைய துறை அமைச்சர் சேகர்பாபு பெருமிதம் தெரிவித்துள்ளார். முதலமைச்சரின் மகனும், திமுகவின் இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின், பிறந்தநாளை முன்னிட்டு சென்னை ராயபுரம் அரசு மகப்பேறு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு, பரிசுப்பொருட்களை வழங்கும் நிகழ்வில் அமைச்சர் சேகர்பாபு கலந்துகொண்டார்.

இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், திமுக ஆட்சிக் கட்டிலில் அமர்ந்த போது, கொரோனா பரவல் எண்ணிக்கை தினந்தோறும் 40 ஆயிரத்தை தாண்டி இருந்தது. உயிரிழப்புகள் நூறை தாண்டி இருந்தது. தம்முடைய பல்நோக்கு சிந்தனையால் தமிழக முதலமைச்சர்  கொரொனா நோய்த் தொற்றில் இருந்து தமிழக மக்களை காப்பாற்றினார். மற்ற மாநிலங்களில் ஒமைக்ரான் பரவல் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். தமிழ்நாட்டை பொருத்தவரை விஷக் கிருமிகள் மட்டுமல்லாது விஷமத்தனமாக பேசும் அரசியல் கட்சி தலைவர்களிடம் இருந்தும் நம்மையெல்லாம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காப்பாற்றுவார்.

ஒமைக்ரான் வைரஸ் எந்த வடிவத்தில் வந்தாலும் அதனை எதிர்கொள்வதற்கு தமிழ்நாடு முதலமைச்சர் தயாராக இருக்கின்றார். ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் ஒமைக்ரான் தடுப்பு நடவடிக்கைக்கு செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகளை முதலமைச்சர் நேரில் சென்று பார்வையிட்டுள்ளார். வரும்முன் காப்போம் என்ற வார்த்தைக்கு அடையாளமாக திகழ்பவர் முதலமைச்சர். ஒமைக்ரான் வைரஸ் எந்த மாநிலத்தில் வேண்டுமானாலும் நுழையலாம், ஆனால் தமிழகத்தில் ஒமைக்ரான் வரியஸை ஒட்விடும் பணியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சிறப்பாக செயல்பட்டுக்கொண்டிருக்கிறார் என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

PREV
click me!

Recommended Stories

பாகிஸ்தானைப்போல துரோகிகள் அல்ல..! 1 சொட்டு தண்ணீருக்கு 100 ஆண்டு விசுவாசமாக இருப்போம்..! ரன்வீர் சிங்கால் பலூச் மக்கள் வேதனை..!
நான் கூட்டணியில் இருந்து வெளியேற அண்ணாமலை தான் காரணம்..? டிடிவி தினகரன் பரபரப்பு விளக்கம்