கொளத்தூரில் தான் போட்டியிடுவதாக இருந்தேன். ஒருவரை வீழ்த்துவதை விட, மக்களை காப்பது தான் இலக்கு- சீமான்.

By Ezhilarasan BabuFirst Published Mar 8, 2021, 1:18 PM IST
Highlights

தேர்தலில் வென்றால்  எல்லாருக்கும் கார் தருவேன். கண்டிப்பா தருவேன். கையில் போட்டோ கொண்டு வருவேன் அதில் அம்பேத்கார் இருப்பார் அவர்தான் இந்தியாவிலேயே பெரிய கார் - அம்பேத்கார். ஏன் தனியாக நிற்கிறார் சீமான் என கேட்கிறார்கள், பயந்தவர்கள் தான் ஒன்றாக போவார்கள் துணிந்தவன் தனியாக தான் போவான். 

கொளத்தூரில் தான் போட்டியிடுவதாக இருந்தேன். ஆனால் ஒருவரை வீழ்த்துவதை விட, மக்களை காப்பது தான் இலக்கு என்பதால் தொகுதியை மாற்றிவிட்டேன் என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.  சட்டமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பாக போட்டியிடக் கூடிய 234 வேட்பாளர்களையும் ஒரே மேடையில் அறிமுகம் செய்யும் பொதுக்கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள ஒய்எம்சிஏ மைதானத்தில் நடைபெற்றது.

அதில் கலந்து கொண்டு வேட்பாளர்களை அறிமுகம் செய்துவைத்த சீமான் பேசியதாவது, எத்தனை ஜி வந்தாலும் கஞ்சி விவசாயி தான் உத்தனும். ஆடு, மாடு மேய்ப்பதை அரசு பணியாக அறிவிப்பேன் என கூறும் போது முடியாது என்கிறார்கள், சாராயம் விற்பது அரசு பணியாக இருக்கும் போது விவசாயம் செய்வதை அரசு பணியாக மாற்ற முடியாதா? 21 லட்சம் ஏக்கர் அரசு நிலங்களை விவசாய நிலமாக மாற்றப்படும். அதன் மூலம் வேளாண் அரசு துறையாக மாற்றப்படும். கார்கள் இறக்குமதி செய்யப்பட்டு உணவுகள் ஏற்றுமதி செய்யப்படும். குஜராத்தில் 3 வது மாடியில் தீ பற்றி எரியும்போது அதனை அணைப்பதற்கு ஏணி வாங்க 30 ரூபாய் இல்லை. பட்டேல் சிலைக்கு 3000 கோடி செலவு செய்கின்றனர்.கேட்டால் டெலவப்மெண்ட், டெலவப்மெண்ட் ஒன்லி வளர்ச்சி என்கிறார்கள். மதவாதத்திற்கு எதிராக தமிழ் தேசிய பிள்ளைகள் தொடுக்கும் அரசியல் போர் இது. 

விவசாயம் செய்வது இழிவாக கருத்துவோர்க்கு மூணு வேலை ருசியாக சாப்பாடு மட்டும் வேண்டும். தோசையை சுற்றி நெய் மட்டும் ஊற்றி சாப்பிட வேண்டுமா? அப்படி எவனாவது கேட்டால் நாக்கில் உப்பு காகிதம் வச்சி தேய்க்கனும். உயிருள்ளவற்றை தேர்தல் சின்னமாக வழங்க முடியாது எனக்கூறிய தேர்தல் ஆணையம் விவசாயி சின்னமாக கொடுத்ததற்கு காரணம் இப்போ விவசாயி எவனும் உயிரோட இல்லை. உயிரை கொடுத்தாவது விவசாயை காப்போம் என்பதால் தான் நமக்கு சின்னமாக  கொடுத்திருக்கு.

அருவியில் இருந்து ஆறு, ஆறில் இருந்து நீரு, நீரில் இருந்து சோறு, சோறில் இருந்து வயிறு, வயிற்றில் இருந்து உயிரு அவ்வளவு தான் வாழ்க்கை. உலகில் சிறந்த கல்வி வழங்கும் 5 நாடுகளை விட சிறந்த நாடக தமிழகம் மாறும்,  அதற்கு நாம் தமிழர் வெற்றி பெறும். ஒரு முறை வாய்ப்பு கொடுங்கள். ஒருநாள் சிங்களவன் தமிழக மீனவர்கள் மீது கை வைத்தால் கூட அப்போதே பதவியை ராஜினாமா செய்து விடுகிறேன். நம்பிக்கையோடு பயணியுங்கள் நிச்சயம் வெற்றி பெறுவோம்.  நமக்கு தமிழ் ஈழம், தமிழ்நாடு என இரண்டு தாய் நிலங்கள். எல்லாருக்கும் கார் தருவேன். கண்டிப்பா தருவேன். கையில் போட்டோ கொண்டு வருவேன் அதில் அம்பேத்கார் இருப்பார் அவர்தான் இந்தியாவிலேயே பெரிய கார் - அம்பேத்கார். 

ஏன் தனியாக நிற்கிறார் சீமான் என கேட்கிறார்கள், பயந்தவர்கள் தான் ஒன்றாக போவார்கள் துணிந்தவன் தனியாக தான் போவான். சாப்பாட்டில் மட்டும் தான் கூட்டு பொரியல் எல்லாம் அரசியலில் கூட்டு இல்லை. மூன்று நாலு சீட்டை கூட்டணியில் என்னால் பெற முடியாது. கனவுகளை நிறைவேற்ற எனக்கு இந்த நாடு தேவைப்படுகிறது. சீமான் தான் 234 தொகுதிகளும் போட்டியிடுகிறார் என்று நாம் தமிழர்கள் உணர வேண்டும். எல்லோரும் வெற்றியடைய உழைக்க வேண்டும். ஆள் மாற்றம் ஆட்சி மாற்றம் நமக்கு தேவையில்லை. நமக்கு அடிப்படை அரசியல் மாற்றமே தேவை. கொளத்தூரில் தான் போட்டியிடுவதாக இருந்தேன். ஒருவரை வீழ்த்துவதை விட, மக்களை காப்பது தான் இலக்கு அதனால், சீமான் ஆகிய நான் திருவொற்றியூர் தொகுதியில் போட்டியிடுகிறேன். இவ்வாறு பேசினார். 
 

click me!