பலர் எனது எச்சியில் தான் கட்சியே நடத்துகின்றனர்.. சீமான் ஆணவப் பேச்சு..

By Ezhilarasan BabuFirst Published Mar 8, 2021, 1:06 PM IST
Highlights

ஸ்மார்ட் சிட்டி உள்ளது. ஆனால் ஸ்மார்ட் கிராமம் இல்லை. அதன் நாம் தமிழர் கொண்டுவர போகிறது. முன்பெல்லாம் எனது கருத்தை தான் திருடினார்கள் இப்போது எனது வார்த்தையை கூட திருடுகிறார்கள்.  

தான் திருவொற்றியூர் தொகுதியில் போட்டியிடுவதாக சீமான் அறிவித்துள்ளார்.  சட்டமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பாக போட்டியிடக் கூடிய 234 வேட்பாளர்களையும் ஒரே மேடையில் அறிமுகம் செய்யும் பொதுக்கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள ஒய்எம்சிஏ மைதானத்தில் நடைபெற்றது. பெருந்திரளான நாம் தமிழர் கட்சியினர் மைதானம் முழுக்க நிரம்பி இருந்தனர். மேடையில் நிகழ்ச்சி தொடங்கும் முன்னதாக நாம் தமிழர் கட்சகியின் நாட்டுப்புற பாடல்கள் பாடப்பட்டது. அப்போது புழுதி பறக்க அடிடா முப்பாட்டன் பறைய என்ற பாடல் பாடிய பொழுது மொத்த கூட்டமும் ஆர்ப்பரித்து ஆடியது. இதில் 117 ஆண் வேட்பாளர்கள் 117 பெண் வேட்பாளர்கள் என 234 தொகுதிகளுக்குமான ஒவ்வொரு வேட்பாளர்களையும் நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிமுகம் செய்து வைத்தார். 

நாடாளுமன்ற தேர்தலில் மக்களின் கவனத்தை பெரிதாக ஈர்த்த நாம் தமிழர் வேட்பாளர் காலியம்மாள் தனது சொந்த ஊரான பூம்புகார் தொகுதியில் போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சி கொடியேற்றிய பின்னர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். பின்னர் மேடையில் பேசிய இயக்குனர் பாரதிராஜா, அரசியல்வாதி அல்ல ஒரு தமிழன் என்பதால் நாம்தமிழர் மேடையில் இருந்து பேசுகிறேன். சிவந்தி ஆதித்தனார் ஒரு தீக்குச்சி எடுத்து வந்தார் ஆனால் சீமான் தீப்பந்தம் எடுத்து வந்தார். பேச்சு மட்டுமல்ல செயலிலும் செய்து காட்டுபவர் சீமான்.  234 தொகுதிகளிலும் பெண்களுக்கு சம உரிமை அளித்து சரிக்கு சமமாக தொகுதிகளை வழங்கி சாதனை புரிந்து உள்ளார். சீமான் வருவான் வெல்வான் எங்களை நாங்களே ஆள்வோம் என பேசினார். 

பின்னர் பேசிய சீமான், ஆதி மனிதனும் தமிழன் தான், ஆதி மொழியும் தமிழ் தான்.. நாங்கள் உறுதியாக வெல்வோம், தமிழ் எங்கள் முகவரி தமிழ் எங்கள் தாய் தமிழ் எங்கள் அடையாளம் அரசியல் என்பது அனைத்து உயிருக்குமான தேவையும் அதை நிறைவு செய்கிற சேவையும் தான். ஆணுக்கு பெண் நிகரல்ல என்பது எங்கள் கொள்கை அல்ல ஆணும் பெண்ணும் சமம் என்பது தான் எங்கள் கொள்கை. தமிழக மக்கள் வாழ்க்கை போராட்டமாக மட்டுமே உள்ளது. போராடினால் சாவோம். போராட விட்டாலும் சாவோம். போராடினால் வாழ்வதற்கு  வாய்ப்பு உண்டு. எனவே போராடுவோம். 

நான் தொடங்கும் போது இந்தளவிற்கு பெரிய படை உருவாகும் என எவரும் நம்பிருக்க மாட்டார்கள். ஆடு மாடு மேய்ப்பதை அரசு பணி ஆக மாற்றுவோம் என சொல்லும் போது, ஐயோ மாடு மேய்க்க வைக்க போகிறார் சீமான் என கூறினார்கள். கிருஷ்ணர், ஏசு, நபிகள் நாயகம் எல்லோரும் ஆடு மாடு மெய்தவர்கள் தான் என சொல்லுங்கள் ஒரு பயன் வாய் திறந்து பேசமாட்டான்.  ஸ்மார்ட் சிட்டி உள்ளது. ஆனால் ஸ்மார்ட் கிராமம் இல்லை. அதன் நாம் தமிழர் கொண்டுவர போகிறது.முன்பெல்லாம் எனது கருத்தை தான் திருடினார்கள் இப்போது எனது வார்த்தையை கூட திருடுகிறார்கள். பலர் எனது எச்சியில் தான் கட்சியே நடத்துகின்றனர். 10 ஆண்டு பசுமை திட்டம் பலகோடி பனை திட்டம். ஆட்சியில் தான் செய்வோம் என இல்லை இப்போதே அதை செய்து கொண்டு தான் இருக்கிறோம். என்றார்.  

click me!