#BREAKING அதிமுகவில் இருந்து வெளியேறிய முக்கிய கட்சி... முஸ்லீம் ஓட்டுகளை மொத்தமாக அள்ளப்போகும் திமுக?

By vinoth kumarFirst Published Mar 8, 2021, 1:14 PM IST
Highlights

சட்டப்பேரவை தேர்தலில் தமிமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயக கட்சி திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். இதனால், சிறிய கட்சிகள் அடுத்தடுத்து திமுக, அதிமுக கூட்டணிகளுக்கு மாறி மாறி ஆதரவு தெரிவித்து வருவது அரசியல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. 

சட்டப்பேரவை தேர்தலில் தமிமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயக கட்சியும் திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். இதனால், சிறிய கட்சிகள் அடுத்தடுத்து திமுக, அதிமுக கூட்டணிகளுக்கு மாறி மாறி ஆதரவு தெரிவித்து வருவது அரசியல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. 

தமிழக சட்டமன்ற தேர்தல் ஒரே கட்டமாக வருகிற ஏப்ரல் மாதம் 6ம் தேதி நடைபெற உள்ளது. வாக்கு எண்ணிக்கை மே  2ம் தேதியும் நடைபெறும் எனவும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. வேட்புமனுத் தாக்கலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதி பங்கீடு உள்ளிட்ட பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. 

இதனிடையே, கடந்த தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவு அளித்து வந்த முக்குலத்தோர் புலிப்படை கட்சி,  மனிதநேய ஜனநாயக கட்சியின் தமிமுன் அன்சாரியும் அதிமுக கூட்டணியில் இருந்து அதிரடியாக விலகுவதாக அறிவித்தனர். 

இந்நிலையில், கருணாஸை தொடர்ந்து மனிதநேய ஜனநாயகக் கட்சியின் தமிமுன் அன்சாரியும் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் திமுகவுக்கு எழுதியுள்ள கடிதத்தில்;- தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் தங்கள் கட்சியின் ஆதரவு திமுகவுக்கு இருக்கும் என்று தெரிவித்துள்ளார். மேலும், தங்கள் கட்சிக்கு சென்ற முறை போட்டியிட்டு வெற்றி பெற்ற நாகப்பட்டினம் தொகுதியை வாய்ப்பிருந்தால் ஒதுக்கித் தருமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளார். அவர் திமுக தலைவர் ஸ்டாலினை சந்திக்க நேரமும் கேட்டுள்ளார். ஏற்கனவே திமுக கூட்டணியில் மனிதநேய மக்கள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. 

click me!