நான் வாழ்க்கையை முழுமையாக வாழ்ந்துவிட்டேன். இப்போது மக்களுக்காகத்தான் வந்திருக்கிறேன்.. கமல்ஹாசன் உருக்கம்.

By Ezhilarasan BabuFirst Published Mar 30, 2021, 5:07 PM IST
Highlights

நாற்காலியை பிடித்துக்கொண்டு நகரமாட்டேன் என்பவர்கள் மக்களுக்கு வேண்டாம். மக்களுடன் மக்களாக இருப்பவர்கள் தான் வேண்டும்.  மக்களின் ஏழ்மையை மாற்ற முடியாது என்பவர்கள் டுபாக்கூர்கள், ஏழ்மையை மாற்ற முடியும். . 

நாற்காலியை பிடித்துக்கொண்டு நகரமாட்டேன் என்பவர்கள் மக்களுக்கு வேண்டாம் எனவும், மக்களுடன் மக்களாக இருப்பவர்கள் தான் வேண்டும் எனவும்  மநீம தலைவர் கமலஹாசன் தெரிவித்துள்ளார்.சென்னை திருவான்மியூர் பகுதியில் மக்கள் நீதி மய்யம் வேளச்சேரி  தொகுதி வேட்பாளர் சந்தோஷ் பாபுவை ஆதரித்து கமலஹாசன் பிரச்சாரத்தில் ஈடுபட்டு ஈடுபட்டார். சந்தோஷ் பாபு கொரானா தொற்றால் பாதிக்கப்பட்ட காரணத்தால் காணொளி காட்சி  மூலமாக பொதுமக்களிடம் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது பேசிய கமல் கூறியதாவது, 

தொகுதிகளில் உள்ள ஒவ்வொரு பிரச்சனையையும் குறித்து வைத்துள்ளோம். எம்எல்ஏ வரவு செலவு கணக்குகளை மக்களும் சரி பார்க்கலாம். 
ஒருத்தர் பிரச்சனையாக இருந்தாலும் ஓராயிரம் பேரின் பிரச்சனையாக இருந்தாலும், அரசை அனுகலம். பேட்ட பிஸ்தாவாக இருந்து வந்தவர் அல்ல சந்தோஷ்பாபு, படித்துவிட்டு அரசியலுக்கு வந்திருக்கிறார், அரசியல் சாக்கடையை சுத்தம் செய்ய வந்துள்ள துப்புரவு தொழிலாளர்கள் நாங்கள்.  இன்றே சுத்தம் செய்யவில்லை என்றால் நாளை தலைமுறை எங்களை திட்டும்.என் தாடிக்குள்ளும் ஒரு குழந்தை உள்ளது. தாய்மார்களுக்கு நான் குழந்தையாக தெரிகிறேன், சிறுவர்களுக்கு நான் இந்தியன் தாத்தாகவாக தெரிகிறேன்,நான் வாழ்க்கையை முழுமையாக வாழ்ந்துவிட்டேன். இப்போது மக்களுக்காக கூட்டத்தில் வந்து நிற்கிறோம். 

ஹெலிகாப்டரில் ஆடம்பரத்துக்காக செல்லவில்லை, அவசியத்திற்காக செல்கிறேன். அரசியலில் பெருந்ததலைவர்கள் நமக்கு பின்னால் யார் என்பதை யோசிப்பார்கள். காந்தி தொடங்கிய காங்கிரஸ் இன்றும் இயங்குகிறது, நானும் சில இளைஞர்களை யோசித்து வைத்திருக்கிறேன்,நாற்காலியை பிடித்துக்கொண்டு நகரமாட்டேன் என்பவர்கள் மக்களுக்கு வேண்டாம். மக்களுடன் மக்களாக இருப்பவர்கள் தான் வேண்டும். மக்களின் ஏழ்மையை மாற்ற முடியாது என்பவர்கள் டுபாக்கூர்கள், ஏழ்மையை மாற்ற முடியும். இவ்வாறு பேசினார்.  

 

click me!