அண்ணன் திருமாவுக்கு கொடுக்க 4 புத்தகம் வாங்கி வச்சி இருக்கேன்.. பொறுப்பா பேசிய அண்ணாமலை.

Published : Apr 26, 2022, 05:21 PM IST
அண்ணன் திருமாவுக்கு கொடுக்க 4 புத்தகம் வாங்கி வச்சி இருக்கேன்.. பொறுப்பா பேசிய அண்ணாமலை.

சுருக்கம்

விடுதலைச்சிறுத்தைகள் தலைவர் அண்ணன் திருமாவளவனுக்கு பரிசளிக்க நான்கு புத்தகங்களை வாங்கி வைத்திருக்கிறேன் என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

விடுதலைச்சிறுத்தைகள் தலைவர் அண்ணன் திருமாவளவனுக்கு பரிசளிக்க நான்கு புத்தகங்களை வாங்கி வைத்திருக்கிறேன் என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். அம்பேத்கர் தொடர்பாக இரு கட்சிகளுக்கும் இடையே கருத்து மோதல் ஏற்பட்டுள்ளது நிலையில் அண்ணாமலை இவ்வாறு கூறியுள்ளார். அண்ணல் அம்பேத்கர் பிறந்த தினத்தன்று கோயம்பேட்டில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவிக்கும் போது விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு பாஜகவுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. பின்னர் அது கலவரமாக மாறியது. அதில் 3 பாஜகவினரின் மண்டை உடைந்தது. கட்சி தொட்டது காயமடைந்தனர் இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதே நேரத்தில் அண்ணல் அம்பேத்கருடன்  பிரதமர் மோடியை ஒப்பிட்டு புத்தகம் ஒன்றில் இசையமைப்பாளர் இளையராஜா முன்னுரை எழுதியுள்ளார். இது நாடு முழுவதும் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது. இளையராஜாவை பலரும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். அம்பேத்கர் மாபெரும் சட்ட மேதை, ஈடு இணையற்ற தலைவர்,அவருடன் மோடியை ஒப்பிட்டு பேசுவது சரிதானா என இளையராஜாவை விமர்சித்து வருகின்றனர். ஆனால் அண்ணல் அம்பேத்கருடன் பிரதமர் மோடியை ஏன் ஒப்பிடக்கூடாது, அதில் என்ன தவறு இருக்கிறது? அண்ணல் அம்பேத்கர் ஆர்எஸ்எஸ்சை ஆதரித்தார். அம்பேக்தகரை ஆர்எஸ்எஸ் ஆதரித்தது. ஆர்எஸ்எஸ்சை  பாராட்டி அம்பேத்கர் பேசியுள்ளார். அதுகுறித்து விவாதிக்க விடுதலை சிறுத்தைகள் தலைவர் தொல் திருமாவளவன் தயாரா? என அண்ணாமலை சவால் விடுத்தார்.

ஆனால் அரசியலில் அண்ணாமலை எனக்கு ஒரு சப் ஜூனியர், அவருடன் விவாதிக்க ஒரு சப்ஜூனியரை அனுப்பி வைக்கிறேன் என திருமாவளவன் பதிலனி கொடுத்தார். இந்நிலையில் இளம் சிறுத்தைகள் பாசறையின் மாநில செயலாளர் சங்கத்தமிழன் அண்ணல் அம்பேத்கர்- ஆர்எஸ்எஸ் தொடர்பாக விவாதிக்க தயார் என்று,  அண்ணாமலைக்கு புத்தகம் கொடுக்க கமலாலயம் வருவதாகவும்  அண்ணாமலைக்கே போன் போட்டு அறிவித்தார். இந்நிலையில் இப்புத்தகம் கொடுப்பதை விடுதலை சிறுத்தைகள் தவிர்க்க வேண்டும் என திருமாவளவன் கட்டுப்பாடு விதித்துள்ளார். இந்நிலையில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை  ட்விட்டர் பக்கத்தில் இது குறித்து கருத்து ஒன்று பதிவிட்டுள்ளார்.

அதில், அண்ணன் தொல்.திருமாவளவன் பாஜக சார்பாக மனு வாதமும் ஆர்எஸ்எஸ்சும்- விஜயபாரதம் பதிப்பகம்,  இந்துத்துவ அம்பேத்கர்-மா.வெங்கடேசன், சங்கத் தமிழும் பிற்காலத் தமிழும், தமிழ் தாத்தா டாக்டர் உ.வே சாமிநாத ஐயர் மற்றும் மாணிக்கவாசக சுவாமிகள் அருளிய திருவாசகம், ஆகிய நான்கு புத்தகங்களை அன்போடு பரிசளிப்பதற்காக அலுவலகத்திலேயே வைத்துள்ளேன் எனக் குறிப்பிட்டுள்ளார். 
 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

ஓ.பி.எஸ்- டிடிவி.தினகரனுக்கு அமித் ஷா போடும் முட்டுக்கட்டை..! தவெகவுக்கு செக் வைக்கும் அமமுக..!
திமுக மீது தவெகவின் திடீர் கரிசனம்.. டெல்லியில் நடந்த மனமாற்றம்..! அடியோடு மாறிய நிர்வாகிகள்..!