1 வருஷமா பாஜகவில் கசப்புடன்தான் இருக்கிறேன்.. வாங்க வாங்கன்னு கூப்பிட்டாங்க, ஒன்னும் இல்ல.. குமுறும் ராதாரவி.

By Ezhilarasan BabuFirst Published Oct 4, 2021, 6:09 PM IST
Highlights

கடந்த ஒரு வருடமாக பாஜக கட்சிக்குள் கசப்புடன் தான் இருக்கிறேன் என்றும், கட்சியில் சேர சொல்லி அழைக்கும்போது வாங்க வாங்க என்று அழைக்கிறார்கள் ஆனால் சேர்ந்த பிறகு நாம் என்று தெரிவதற்கு பயோடேட்டாவை கொடுக்கனும்போல என அவர் வேதனை தெரிவித்துள்ளார்.

கடந்த ஒரு வருடமாக பாஜக கட்சிக்குள் கசப்புடன் தான் இருக்கிறேன் என்றும், கட்சியில் சேர சொல்லி அழைக்கும்போது வாங்க வாங்க என்று அழைக்கிறார்கள் ஆனால் சேர்ந்த பிறகு நாம் என்று தெரிவதற்கு பயோடேட்டாவை கொடுக்கனும்போல என அவர் வேதனை தெரிவித்துள்ளார். அதே நேரத்தில் தங்களது குறைகளை மாநிலத் தலைவரை சந்தித்துகூட கூற முடியாத நிலை உள்ளது என்றும் அவர் கூறியுள்ளார். அவரின் இந்த கருத்து பாஜகவினரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. இறுதியாக திமுகவில் இருந்து வெளியேறிய கடந்த சட்டமன்ற தேர்தலுக்கு முன்னர் பாஜகவில் இணைந்தவர் நடிகர் ராதாரவி, உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக பாஜக கை கோர்த்து செயல்பட்டு வரும் நிலையில், அது குறித்து தனியார் வார இதழுக்கு அவர் பேட்டி ஒன்று கொடுத்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:- 

எனக்கு மூடிமறைத்தெல்லாம் பேசத் தெரியாது, மனதில் பட்டதை  அப்படியே பேசி விடுவேன், அந்தப் பேச்சுக்கள் கொஞ்சம் சூடாகத்தான் இருக்கும், திமுகவில் இருக்கும் போது நான் இப்படி தான் இருந்தேன், இதற்காக என்னை இரண்டாம் தாரம் பேச்சாளர்கள் என்றும் கூட சொல்லிக் கொள்ளுங்கள் எனக்கு கவலை இல்லை, நான் ஒன்றும் அறிவார்ந்த பேச்சாளர் கிடையாது, உள்ளாட்சித் தேர்தலில் பிரச்சாரம் செய்வேனா இல்லையா என்று எனக்கு தெரியவில்லை , கட்சி தலைமையில் இருந்து கூப்பிட்டால் பேசுவேன், கூப்பிட வில்லை என்றாலும் அதற்காக அழுத்தம் கொடுக்க மாட்டேன். பணம் பதவியைத் தேடி போகிற ஆள் நான் இல்லை. கட்சிக்கு அழைக்கும்போது வாங்க வாங்க என்று கூப்பிடுகிறார்கள், திராவிட இயக்கத்தில் இருந்து ராதாரவி எல்லாம் வந்து விட்டாரப்பா என்று பிரமிப்புடன் பேசுகிறார்கள். ஆனால் கட்சியில் சேர்ந்து விட்ட பிறகு நாம் யார் என்று தெரிவதற்கு நம்முடைய பயோடேட்டாவை கொடுக்கணும் போல என ஆதங்கம் தெரிவித்துள்ளார். 

மேலும், கடந்த ஒரு வருடமாக கட்சியில் கசப்புடன் தான் இருக்கிறேன் என அவர் கூறியுள்ளார், பொன் ராதாகிருஷ்ணன் என்னை பாஜகவுக்கு அழைத்தார் எதை வைத்து என்னை அழைத்தார் என்று தெரியவில்லை என்ற அவர், தனது குறைகளை மாநிலத்தலைவர் அண்ணாமலையை சந்தித்து கூற முடியாத நிலை உள்ளது, பாவம் அவர் அந்த அளவுக்கு பிஸியாக இருக்கிறார், கட்சிப் பணிக்காக ஒவ்வொரு நாளும் தொடர்ந்து சுற்றுப்பயணம் சென்று கொண்டிருக்கிறார், அவரைப் பார்த்து நான் எனது குறையை சொல்ல வேண்டுமென்றால், நானும் ஊரு ஊராக அவர் பின்னால் சுற்ற முடியுமா? பாஜக என்பது நல்ல கட்சி, பிரதமர் மோடி அமித்ஷா பற்றி எல்லாம் தெரிந்து தான் அந்தக் காட்சியிலேயே நான் போய் சேர்ந்தேன். ஒரு தேசிய கட்சி என்றால் இது போன்ற பிரச்சனைகள் இருக்கும்தான் இதெல்லாம் தெரிந்துதான் நாம்சேர்ந்து இருக்கிறோம் எனக்கூறியவர். 

இப்போதே எனக்கு 69 வயது ஆகிவிட்டது, இனியும் வேறு கட்சிக்கு போகும் எண்ணம் இல்லை, இன்னும் யார்யாருக்கோ பேசினால் இதுவே வேலையாகி விடும், பாஜகவே நல்ல வாய்ப்புள்ள கட்சிதான் என அவர் கூறியுள்ளார், ஆனால் கட்சியில் கடந்த ஓராண்டு காலமாக கசப்புடன் தான் இருக்கிறேன் என்று அவர் கூறியிருப்பது கட்சியில் தனக்கான அங்கீகாரம் கிடைக்கவில்லை என்ற ஆதங்கத்தின் வெளிப்படாகவே பார்க்கப்படுகிறது.
 

click me!