செம்மண் குவாரி முறைகேடு வழக்கு... அமைச்சர் பொன்முடி, அவரது மகனை காத்திருக்க வைத்த நீதிமன்றம்..!

By vinoth kumarFirst Published Oct 4, 2021, 4:42 PM IST
Highlights

கடந்த திமுக ஆட்சியின் போது விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே உள்ள பூந்துறை கிராமத்தில் அளவுக்கு அதிகமாக செம்மண் எடுத்து அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்தியதாக திமுக அமைச்சர் பொன்முடி, அவரது மகன், உறவினர்கள் உள்ளிட்ட  8 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. 

செம்மண் குவாரி முறைகேடு வழக்கில் திமுக அமைச்சர் பொன்முடி, அவரது மகனும் எம்.பி.யுமான கவுதமசிகாமணி இருவரும் விழுப்புரம் நீதிமன்றத்தில் ஆஜராகினர். 

கடந்த திமுக ஆட்சியின் போது விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே உள்ள பூந்துறை கிராமத்தில் அளவுக்கு அதிகமாக செம்மண் எடுத்து அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்தியதாக திமுக அமைச்சர் பொன்முடி, அவரது மகன், உறவினர்கள் உள்ளிட்ட  8 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. 2012ம் ஆண்டு விழுப்புரம் மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையினரால் பதிவு செய்யப்பட்ட இந்த வழக்கின் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.  

இந்நிலையில், விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி இளவழகன் முன்னிலையில் அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மகனும் எம்.பி.யுமான கவுதம் சிகாமணி உள்ளிட்டோர் ஆஜராகினர். இந்த வழக்கில் அமைச்சர் பொன்முடி உள்ளிட்டோர் குற்றவாளிகள் என்று அரசு தரப்பில் கூறப்பட்டது. இந்நிலையில், இதுதொடர்பான நகலை வழங்குவதற்காக இரண்டு முறை உள்ளே அழைத்து பின்பு காத்திருக்க வைத்தனர்.

இதையும் படிக்கவும்;- ஓ.பி.எஸின் அதிர்ஷ்டம் அது.. சசிகலாவுக்கு அது பலன் அளிக்காது.. பூங்குன்றன் சொல்லும் ரகசியம்..!

கடந்த 3 மணி நேரமாக உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மகனும் எம்.பி.யுமான, கவுதம சிகாமணி உள்ளிட்டோர் நீதிமனடற வளாகத்தில் காத்திருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து,  அவர்களை வெளியே போக அனுமதித்து 3.45 மணிக்கு திரும்ப வருமாறு நீதிபதி கூறினார். நீதிமன்றம் அனுமதி அளித்ததையடுத்து இருவரும் கிளம்பிச் சென்றனர். 

click me!