கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் திடீர் திருப்பம்.. அதிமுக முன்னாள் அமைச்சருக்கு சம்மன்..!

By vinoth kumarFirst Published Oct 4, 2021, 5:51 PM IST
Highlights

கொடநாடு பகுதியில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மற்றும் அவரது தோழி சசிகலாவிற்கு  சொந்தமான  தேயிலை எஸ்டேட் உள்ளது. இங்கு கடந்த 2017ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 23ம் தேதி காவலாளி ஓம்பகதூர் கொலை செய்யப்பட்டார். 

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் மில்லர், அவரது கார் ஓட்டுநர் ஆகியோருக்கு தனிப்படை போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர். 

கொடநாடு பகுதியில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மற்றும் அவரது தோழி சசிகலாவிற்கு  சொந்தமான  தேயிலை எஸ்டேட் உள்ளது. இங்கு கடந்த 2017ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 23ம் தேதி காவலாளி ஓம்பகதூர் கொலை செய்யப்பட்டார். அங்கிருந்த பல்வேறு முக்கிய ஆவணங்கள் மற்றும் பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டன. இது தொடர்பாக கோவையை சேர்ந்த சயான், வாளையார் மனோஜ் உட்பட 10 பேரை கோத்தரிகிரி போலீசார் கைது செய்தனர். 

இந்த கொலை, கொள்ளை வழக்கில் தொடர்புடைய ஜெயலலிதாவின் முன்னாள் கார் ஓட்டுநர் சேலம் ஆத்தூர் பகுதியை சேர்ந்த கனகராஜ் சாலை விபத்தில் மர்மமான முறையில் உயிரிழந்தார். இவ்வழக்கு விசாரணை ஊட்டியில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. நீதிமன்றம் அனுமதியின் பேரில் தற்போது  இந்த வழக்கு மறுவிசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதில், கனகராஜின் அண்ணன் தனபால் மனைவி கலைவாணி, மைத்துனர், அவரது நண்பர்களிடம் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தினர். மேலும், கொடநாடு எஸ்டேட்டில் பணியாற்றி தற்கொலை செய்து கொண்ட கம்யூட்டர் ஆபரேட்டர் தினேஷ்குமாரின் பெற்றோர், அக்காவிடம் தனிப்படை போலீசார் விசாரணை மேற்கொண்டனர். 

இதையும் படிங்க;- உல்லாசமாக இருந்த கள்ளக்காதல் ஜோடி.. பொதுமக்களிடம் வசமாக சிக்கியது.. பிறகு நடந்த தரமான சம்பவம்..!

இதனிடையே, கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் கைதான கேரளாவை சேர்ந்த ஜம்சீர் அலி, மனோஜ்சாமி, சந்தோஷ்சாமி ஆகியோரிடமும் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தினர். இந்நிலையில், இவ்வழக்கு தொடர்பாக ஊட்டி மாவட்ட நீதிமன்றத்தில் 1ம் தேதி விசாரணை நடைபெற்றது. கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் கைதான முக்கிய குற்றவாளி சயான், வாளையார் மனோஜ் நீதிமன்றத்தில் ஆஜராகினர். அப்போது, தனிப்படை இன்ஸ்பெக்டர் வேல்முருகன் 34 பேரிடம் நடத்திய விசாரணை தொடர்பான அறிக்கையை தாக்கல் செய்தார். 

இதையும் படிங்க;- சசிகலா வெளியேறிய நேரம்... முக்குலத்தோரை அழைத்த ஜெயலலிதா... மனம் நொந்த உதவியாளர்..!

இதைத்தொடர்ந்து வழக்கை விசாரித்த நீதிபதி சஞ்சய் பாபா தொடர்ந்து வழக்கு விசாரணை நடைபெற்று வருவதாகவும் விசாரணையை வரும் 29ம் தேதிக்கு ஒத்திவைத்தார். இந்நிலையில், கொடநாடு கொலை, கொள்ளை சம்பவம்  நடந்த அன்று கூடலூர் வழியாக குற்றவாளிகள் தப்பிச்செல்ல உதவியது குறித்து விசாரிக்க அதிமுக முன்னாள் அமைச்சர் மில்லர்  அவரது கார் ஓட்டுநர் ராஜேசுக்கு தனிப்படை போலீசார் சம்மன் அனுப்பி உள்ளனர்.  

click me!